புதிய நிசான் மைக்ரா காரின் முழுமையான தரிசனம்... கண்டு களியுங்கள்!

கடந்த மாதம் பாரிஸ் மோட்டார் ஷோவில் புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்முறையாக இந்த காரின் நேரடி படங்கள் ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் வெளியாகி வைரலாகியிருக்கிறத

Written By:

முற்றிலும் மாறுபட்ட தளத்தில் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரை நிசான் மைக்ரா காரின் ஸ்பை படங்கள் மற்றும் உத்தேச படங்களை பார்த்து வந்த நிலையில், உண்மையான தயாரிப்பு நிலை மாடலின் நேரடி படங்கள் தற்போது ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.

தற்போதைய நிசான் மைக்ரா காரின் டிசைனிலிருந்து முற்றிலும் புதிதாக மாறி அசத்தும் அந்த காரின் படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தற்போதைய மாடல் வழக்கமான டிசைன் தாத்பரியங்களை கொண்டிருக்கும் நிலையில், புதிய தலைமுறை மாடல் முற்றிலும் புதிய காராகவே மாறியிருக்கிறது. ஸ்வே கான்செப்ட்டில் மாடலின் தாத்பரியங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய நிசான் மைக்ரா கார் 3,995மிமீ நீளமும், 1,742மிமீ அகலமும், 1,452மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாடலைவிட 170மிமீ நீளத்திலும், 77மிமீ அகலத்திலும் அதிகரித்துள்ளது. ஆனால், உயரம் 69 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் வீல் பேஸ் 75மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், உட்புறத்தில் மிக அதிக இடவசதி கொண்ட காராக இருக்கும்.

அதத்தலான முகப்பு, ஹெட்லைட் அமைப்பு, அழுத்தமான மடிப்புகள் கொண்ட பிட்டம், டைமன்ட் கட் அலாய் வீல்கள் என சுண்டி இழுக்கிறது இதன் தோற்றம். ஒட்டுமொத்த தோற்றமும் மிக மிக பிரிமியமாகவும், அசத்தலாகவும் இருக்கிறது.

புதிய நிசான் மைக்ரா காரில் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 0.9 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் 72 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் பின்னர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

உட்புறமும் மிக பிரிமியமாக இருக்கிறது. 7 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதி, சாட்டிலைட் நேவிகேஷன், அனலாக் டயல்கள் மற்றும் டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஆம்பியன்ட் லைட் செட்டிங் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகமாக இருக்கிறது. இந்த புதிய நிசான் மைக்ரா கார் பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும்.

இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என கருதப்படும் இந்த புதிய கார், சென்னையில் உள்ள ரெனோ- நிசான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும். மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Here are the live images of the 2017 Nissan Micra without any camouflage.
Please Wait while comments are loading...

Latest Photos