புதிய டாடா ஹெக்ஸா காருக்கு முன்பதிவு துவங்கியது!

Written By:

டியாகோ கார் மூலமாக மார்க்கெட்டில் தனது நன்மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக, புதிய ஹெக்ஸா காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

க்ராஸ்ஓவர் ரகத்தில் வரும் இந்த புதிய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டியாகோ கார் போலவே இந்த காரும் சிறந்த தொழில்நுட்ப வசதிகள், டிசைன் அம்சங்களுடன் வருகிறது.

இந்த நிலையில், நாடுமுழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் புதிய ஹெக்ஸா காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளளாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவை ரத்து செய்தால் முன்பணத்தை முழுவதுமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு விரைவில் டெஸ்ட் டிரைவ் கார்கள் வர இருக்கின்றன. அதன்பின்னர், இந்த புதிய கார் எப்படியிருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து புதிய ஹெக்ஸா காரை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஆரியா எம்பிவி கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ஹெக்ஸா கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆரியா காரின் தோற்றத்தைவிட,  கம்பீரம் கூடியிருக்கிறது ஹெக்ஸாவில்.

நவீன தொழில்நுட்ப வசதிகள், 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா ஹெக்ஸா கார்.

வரும் ஜனவரி மாதம் 16ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பேஸ் மாடல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும், டாப் வேரியண்ட் ரூ.15 லட்சம் விலையிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவான தொழில்நுட்ப வசதிகள், சரியான விலையில் வரும் என்ற காரணங்கள் இந்த கார் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

புதிய டாடா ஹெக்ஸா கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
New Tata Hexa bookings open At Rs.11,000.
Please Wait while comments are loading...

Latest Photos