புதிய டாடா நானோவின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய நானோவின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நானோ வடிவில் உலகின் மிகவும் விலை குறைவான கார் மாடலை அறிமுகம் செய்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்நிறுவனம் புதிய நானோ மாடலை தயாரித்து வருகிறது.

புதிய டாடா நானோ மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பெலிக்கன்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நானோவை, உற்பத்தி ஆலையை சேர்ந்தவர்கள் 'பெலிக்கன்' என்ற கோட் நேம் (குறியீட்டு பெயர்) கொண்டு அழைக்கின்றனர். இந்த புதிய நானோ, முன்பு வெளியாகிய நானோ மாடல்களை காட்டிலும் கூடுதல் பிரிமியம் உணர்வு வழங்கும் வகையிலான மாடலாக இருக்கும்.

புதிய நானோ பெலிக்கன் மாடலின் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியது.

தோற்றம்;

புதிய டாடா நானோ பெலிக்கன், மறுவடிவமைக்கப்பட்ட ஹெட்லைட் கிளஸ்டர் கொண்டிருக்கும். டாடா டிசைனர்கள் இதன் முழு பாடியையும் மறுவடிவமைத்துள்ளனர். இதம் முன் பம்பர் மற்றும் ரியர் பம்பருக்கு ஸ்பெஷல் கவனம் அளிக்கப்பட உள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்பு, பல்வேறு டிசைன் மாற்றங்களும் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய டாடா நானோ பெலிக்கன், பெரிய இஞ்ஜின் தேர்வுடன் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இது, தற்போது வழங்கபப்டும் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகும்.

டிரான்ஸ்மிஷன்;

புதிய டாடா நானோ பெலிக்கன் மாடலின் 2 இஞ்ஜின் தேர்வுகளும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வெளியாகும்.

சிறப்பு அம்சங்கள்;

புதிய டாடா நானோ பெலிக்கன், 13-இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது. ஃப்யூவல் ஃபில்லர் கேப் (மூடி) ரியர் ஃபெண்டர் அருகே நகர்த்தப்பட்டுள்ளது. பிரிமியம் உணர்வு வழங்கும் நோக்கில், டியாகோ ஹேட்ச்பேக்கின் டேஷ்போர்ட் பொருத்தப்பட உள்ளது. சென்டரில் இருந்த ஸ்பீடோமீட்டர் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு;

புதிய டாடா நானோ பெலிக்கன், சவாலான விலையில், ஈர்க்கும் அம்சங்களுடன், நிகழ் தலைமுறை நானோவிற்கு மாற்றாக அமைய உள்ளது.

போட்டி;

தேவையான அனைத்து மேம்பாடுகளும் செய்யப்பட்டு, புதிய டாடா நானோ பெலிக்கன், டட்சன் ரெடி-கோ, ரெனோ க்விட் மற்றும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 மாடல்களுடன் போட்டி போடும் வகையில் அறிமுகம் செய்யப்படும்.

அறிமுகம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை புதிய டாடா நானோ பெலிக்கன் மாடலை 2017-ல் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Spy Pictures Credit ; www.vahanpurchase.com

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Tata Motors is planning to launch All-New Nano soon. New Tata Nano was spied testing under heavy camouflage and those Spy Pics have released now. New model is known as 'Pelican', which is codename used by factory insiders. New Nano from Tata Motors will possess premium features. Next-gen Nano shall be introduced by Tata Motors during 2017. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos