புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!

By Saravana

எதிர்பார்த்தது போலவே பழைய மாடலைவிட சில லட்சங்கள் கூடுதல் விலையில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், கொடுக்கும் பணத்திற்கு தகுந்த வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

சொகுசு காரை போன்ற எண்ணத்தை தரும் சிறப்பம்சங்களுடன் சரியான பட்ஜெட்டில் வந்துள்ளது புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார். இந்த நிலையில், புதிய இன்னோவா காரில் இருக்கும் முக்கிய அம்சங்களை எளிதாக தெரிந்துகொள்வதற்காக தனியாக இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்

எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட் புதிய இன்னோவா காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் பாதுகாப்புக்கும், கவர்ச்சிக்கும் இந்த புரொஜெக்டர் ஹெட்லைட் மிகச் சிறப்பானதாக இருக்கும். வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களில் மிக முக்கியமானதாக இதனை குறிப்பிடலாம்.

எல்இடி ஆம்பியன் லைட் சிஸ்டம்

எல்இடி ஆம்பியன் லைட் சிஸ்டம்

முதல் வரிசை இருக்கைக்கு மேலே ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மேலாக நீல வண்ண ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பயணத்தின்போது புது வித அனுபவத்தை வழங்கும். இலுமினேஷன் குழல் விளக்குகள் முடியும் இடத்தில் இரண்டாவது வரிசை பயணிகளுக்கான ரீடிங் லேம்புகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

சொகுசான இருக்கைகள்

சொகுசான இருக்கைகள்

புதிய இன்னோவா காரின் லெதர் இருக்கைகள் மிக மிக சொகுசாக இருக்கின்றன. மேலும், அமர்வதற்கு மிக சவுகரியமாகவும் வடிவமைப்பை கொண்டுள்ளன. இது சொகுசு காரின் இருக்கைகளில் அமர்வது போன்ற உணர்வை தர வல்லது.

மடக்கி விரிக்கும் மேஜை

மடக்கி விரிக்கும் மேஜை

முன் இருக்கைக்கு பின்புறத்தில் மடக்கி வைக்கும் வசதியுடன் கூடிய டேபிள்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிற கார்கள் போன்று தகடு போல அல்லாமல் மிக வலுவானதாக இருக்கிறது. உணவு பொருட்கள், கேமரா, மொபைல்போன், ஜுஸ் கப் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ள உதவும். இது 10 கிலோ எடையை தாங்க வல்லது.

முன் இருக்கையை நகர்த்தும் வசதி

முன் இருக்கையை நகர்த்தும் வசதி

இரண்டாவது வரிசையில்தான் இன்னோவா உரிமையாளர்கள் பெரும்பாலும் அமர்ந்து செல்வதாக டொயோட்டா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டாவது வரிசை இடது இருக்கை பயணி, முன்னால் இருக்கும் முதல் வரிசை இருக்கையை பின்புறத்திலிருந்தே நகர்த்தும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

படூல் விளக்குகள்

படூல் விளக்குகள்

இரவு நேரத்தில் காரில் இருந்து இறங்கும்போது கால் வைக்கும் இடத்தில் இருக்கும் பள்ளம் மேடுகளையும், பொருட்களையும் எளிதாக பார்த்துக் கொண்டு இறங்கும் விதத்தில் சைடு மிரர்களின் கீழே படூல் விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

க்ளட்ச் ஸ்டார்ட் சிஸ்டம்

க்ளட்ச் ஸ்டார்ட் சிஸ்டம்

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இன்னோவா காரில் க்ளட்ச்சை மிதித்தால் மட்டுமே எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். இது சிறந்த பாதுகாப்பு அம்சமாக தெரிவிக்கப்படுகிறது.

 டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் விதத்தில் Eco மற்றும் Power என்ற இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. Eco ஆப்ஷனில் வைத்து செலுத்தும்போது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழிகிடைக்கும்.

மர அலங்கார வேலைப்பாடுகள்

மர அலங்கார வேலைப்பாடுகள்

காரின் உட்புறத்தின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் டேஷ்போர்டு, கதவுகள், இருக்கைகளின் பின்புற பகுதிகளில் பழுப்பு வண்ணத்திலான மர அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது பார்ப்போரை கவர்ந்திழுக்கும் அம்சம். அத்துடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் டேஷ்போர்டின் அழகை கூட்டுகிறது. அத்துடன், அலுமினிய பீடிங்குகள், க்ரோம் பாகங்கள் மூலமாக டேஷ்போர்டு மிக அலங்காரமாக காட்சி தருகிறது.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

புஷ் பட்டன் ஸ்டார்ட்

பாக்கெட்டில் ஸ்மார்ட் சாவி இருந்தாலே, பட்டனை அழுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்யவும், அணைப்பதற்குமான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் என்ட்ரி சிஸ்டம், தானியங்கி டெயில் கேட் போன்றவை புதிய டொயோட்டா இன்னோவா காரின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசதிகள்.

டாப் வேரியணட்

டாப் வேரியணட்

இங்கே பார்த்த பெரும்பான்மை வசதிகள் டாப் வேரியண்ட் எனப்படும் விலை அதிகம் கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கும் என்பதை மனதில் கொள்க.

விலை விபரம்

விலை விபரம்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.13.84 லட்சம் முதல் ரூ.20.78 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய இன்னோவா காரின் பிரத்யேக படங்கள்!

புதிய இன்னோவா காரின் பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

Most Read Articles
English summary
Toyota Innova brought the word 'premium' to the MPV segment and now, Toyota is taking a notch further in terms of innovation and they are simply out of the world when it comes to pampering the customer loaded with features. Let us take a look at them.
Story first published: Tuesday, May 3, 2016, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X