ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான கையோடு ஓய்வை அறிவித்த நிகோ ரோஸ்பெர்க்!

Written By:

ஃபார்முலா-1 கார் பந்தயத்திலிருந்து ஓய்வு பெறுவதாக நடப்பு சாம்பியனான ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் அறிவித்துள்ளார்.

மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்று வந்த ரோஸ்பெர்க்கின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நடப்பு சாம்பியன்

கடந்த வார இறுதியில் அபுதாபியில் நடந்த ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் மற்றொரு வீரரான ஹாமில்டனை 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றார் நிகோ ராஸ்பெர்க். இதுதான் அவரது முதல் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டமாகும்.

வாழ்நாள் லட்சியம்

கடும் முயற்சிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்று மலை உச்சியில் இருப்பது போன்று உணர்கிறேன். இதுதான் என் வாழ்க்கையின் சிறந்த தருணமாக உணர்கிறேன். என் நலம் விரும்பிகளுடன் ஆதரவுடன் இந்த சாதனை சாத்தியமானது. இனி எனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

சாம்பியன் மகன்

நடப்பு சீசனில் நடந்த 21 போட்டிகளில் 9 போட்டிகளில் நிகோ ராஸ்பெர்க் வெற்றி பெற்று இந்த ஆண்டின் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஜெர்மனியை சேர்ந்த நிகோ ராஸ்பெர்க் 1982ம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற கெக்கே ராஸ்பெர்க்கின் மகன்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

அதனால், தனது தந்தை வழியிலேயே கார் பந்தயத்தில் ஈடுபட துவங்கினார். தனது 6வது வயதில் கோ கார்ட் ரேஸ் மூலமாக தனது கார் பந்தய வாழ்க்கையை துவங்கினார். சிறு வயதிலேயே மிக திறமையான வீரராக உருவெடுத்தார்.

முதல் வெற்றி

பல வகையான கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர் தனது வாழ்நாள் இலக்கான ஃபார்முலா-1 போட்டிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரான்ட்ஃப்ரீ போட்டியில் முதல் வெற்றியை ருசித்தார்.

போராட்டம்

அதன்பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டு போராட்டத்திற்கு பின் தற்போது ஃபார்முலா-1 சாம்பியனாகியதுடன், கையோடு ஓய்வு முடிவையும் அறிவித்துவிட்டார். கடந்த 2010ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை ஏழு முறை சாம்பியன் வென்ற மைக்கேல் ஷூமேக்கருடனும் மெர்சிடிஸ் அணிக்காக களமிறங்கி வந்திருக்கிறார் ராஸ்பெர்க்.

சாதனைகள்

இதுவரை 206 ஃபார்முலா-1 கார் பந்தயங்களில் களமிறங்கியுள்ள ராஸ்பெர்க் 23 முறை ரேஸ்களில் வெற்றி பெற்றிருக்கிறார். 57 முறை போடியம் ஏறி உள்ளார். ஆனால், முதல்முறையாக இப்போது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டார்.

சக அணி வீரர்

இளவயதிலேயே நேர் போட்டியாளராக இருந்து வரும் ஹாமில்டனும், ராஸ்பெர்க்கும் சில ஆண்டுகளாக மெர்சிடிஸ் அணிக்காக களமிறங்கி வந்தனர். ஒரே அணியை சேர்ந்த வீரர்களாக இருந்தும், பந்தய களத்தில் அவ்வப்போது முட்டல் மோதல்கள் இருவருக்குள்ளும் நடைபெறுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வந்தது.

அடுத்து யார்?

இந்த நிலையில், ராஸ்பெர்க் ஓய்வு முடிவை அறிவித்திருப்பதை தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 போட்டியில் மெர்சிடிஸ் அணியில் நிகோ ராஸ்பெர்க் இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Nico Rosberg, the current Formula One Champion has announced his retirement from the sport with immediate effect.
Please Wait while comments are loading...

Latest Photos