ஒருமுறை ஹைட்ரஜன் நிரப்பினால் 1,900 கிமீ பயணிக்கும் டிரக் அறிமுகம்!

Written By:

அதிசக்திவாய்ந்த, அதிக தூரம் பயணிக்கும் ஹைட்ரஜனில் இயங்கும் புதிய டிரக் மாடலை அமெரிக்காவை சேர்ந்த நிகோலா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

புகையற்ற பூமியை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டிரக் குறித்த பல வியக்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நிகோலா ஒன் என்ற பெயரில் இந்த ஹைட்ரஜனில் இயங்கும் டிரக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வடிவமைப்பே மிக பிரம்மாண்டமாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. இந்த டிரக்கில் பல வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

நிகோலா ஒன் டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 320 kWh லித்தியம் அயான் பேட்டரியின் மூலமாக மின் மோட்டார்களுக்கு மின்சாரம் பெறப்படுகிறது. இதிலிருக்கும் மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 1,000 குதிரைசக்தி திறனை[986 பிஎச்பி] வழங்க வல்லது.

இந்த டிரக்கின் சக்திவாய்ந்த லித்தியம் அயான் பேட்டரியை எலக்ட்ரிக் கார்கள் போன்று ப்ளக்- இன் முறையில் சார்ஜ் ஏற்ற முடியும். அதேநேரத்தில், லித்தியம் அயான் பேட்டரிக்கு தேவையான மின்சாரம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை சார்ஜ் ஏற்றினால், குறைந்தது 1,300 கிமீ முதல் அதிகபட்சமாக 1,900 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். அதாவது, தற்போது பயன்பாட்டில் உள்ள டீசல் டிரக்குகளைவிட இருமடங்கு தூரம் பயணிக்கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கழிவாக நீராவி மட்டுமே வெளியாகும். புகை இருக்காது என்பதால் சுற்றுச்சூழலுக்கும் மிக உன்னதமான மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இந்த டிரக்கில் ஓட்டுனர்கள் ஓய்வுக்காக இரண்டு சொகுசான படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்மார்ட் டிவி, வைஃபை இன்டர்நெட் வசதி, 4ஜி இன்டர்நெட் வசதியுடன் மிக அசத்தலாக வருகிறது. மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டியும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த டிரக்கை குத்தகை அடிப்படையில் விற்பனை செய்ய நிகோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், டிரக்கிற்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருள் மற்றும் வாரண்டி உள்ளிட்ட அனைத்தும் விலையில் சேர்த்து வாங்கப்படுகிறது.

எனவே, டிகோலா நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களில் ஹைட்ரஜனை இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம். மேலும், தனது டிரக்குகளுக்காக 364 ஹைட்ரஜன் ஃப்யூசல் செல் சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் அமைக்க நிகோலா ஒன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

English summary
Nikola's hydrogen fuel cell powered truck has finally been revealed and it promises up to deliver up to 1,900 emission free kilometers on a single tank.
Please Wait while comments are loading...

Latest Photos