புதிய நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக சிறந்த ஆக்சிலரேஷன் கொண்ட இந்த கார் மாடலை ரசிகர்கள் அன்போடு காட்ஸில்லா என்று அழைக்கின்றனர். இந்த சிறப்பு வாய்ந்த மாடலில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், கூடுதல் சிறப்புகளின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வேறுபாடு

முந்தைய மாடலிலிருந்து பல வேறுபாடுகளுடன் 2017 மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் புதிய நிசான் ஜிடிஆர் வந்துள்ளது. முன்புறத்தில் வி வடிவிலான புதிய க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முகப்பு க்ரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு பளபளக்கிறது.

கூடுதல் கம்பீரம்

எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ஹெட்லைட் அமைப்பு, புதிய பம்பர் அமைப்பு ஆகியவை மிக கம்பீரமாக காட்சி தருகிறது. ஹெட்லைட்டுகளுக்கு கீழே செங்குத்தான அமைப்புடன் ஏர் வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வடிவம்

புதிய நிசான் ஜிடிஆர் கார்4,710மிமீ நீளமும், 1,895மிமீ அகலமும், 1,370மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 2,780மிமீ ஆக உள்ளது.

 

புதிய அலாய் வீல்கள்

இந்த காரில் ஒய் வடிவிலான ஸ்போக்ஸ் அமைப்புடைய அலாய் வீல்கள் உள்ளன. இந்த காரின் முன்புறத்தில் 255/40 R20 டயர்களும், பின்புறத்தில் 285/35 ஆர்20 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

 

 

பாரம்பரிய டிசைன்

பின்புறத்தில் வட்ட வடிவிலான ஜிடிஆர் காரின் பாரம்பரிய டெயில் லைட் அமைப்பு உள்ளது. பின்புற ஸ்பாய்லர் மற்றும் நான்கு புகைப்போக்கி குழாய்கள் உள்ளிட்டவை ஸ்போர்ட்ஸ் கார் என்பதை பரைசாற்றும் விஷயங்களாக உள்ளன.

இன்டீரியர்

உட்புறமும் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பேடில் ஷிஃப்ட்

பல்வேறு சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மேனுவலாக கியர் மாற்றுவதற்கான பேடில் ஷிஃப்ட் வசதியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்

புதிய நிசான் ஜிடிஆர் காரில் இருக்கும் 3.8 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 எஞ்சின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 637என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

செயல்திறன்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 315 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கார் 1,752 கிலோ எடை கொண்டது.

வண்ணங்கள்

புதிய நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் கட்சுரா ஆரஞ்ச், பியர்ல் பிளாக், கன் மெட்டாலிக், அல்டிமேட் சில்வர், டேடோனா புளூ, வைப்ரன்ட் ரெட் மற்றும் ஸ்ட்ரோம் ஒயிட் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

புதிய நிசான் ஜிடிஆர் கார் ரூ.1.99 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

English summary
Nissan's manic GT-R, the car known as Godzilla to its faithful fan base has finally entered India.
Please Wait while comments are loading...

Latest Photos