நிசான் டெரானோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்தது - விபரம்!

Written By:

போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களை எளிதாக இயக்க முடியும். இதனால், இந்த வகை கியர்பாக்ஸ் கொண்ட கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது நிசான் டெரானோ எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விலை உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நிசான் டெரான் எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் ரூ.13.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் நிசான் டெரானோ. ஆனால், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஏஎம்டி மாடலைவிட கிட்டத்தட்ட ரூ.78,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் என்பதை வேறுபடுத்துவதற்காக பின்புறத்தில் ஏஎம்டி பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வண்ணங்களுடன் சேர்த்து சேண்ட்ஸ்டோன் பிரவுன் என்ற புதிய வண்ணத்திலும் நிசான் டெரானோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் கிடைக்கும்.

கூடுதல் விலைக்கு தக்கவாறு சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கருப்பு மற்றும் பீஜ் வண்ணக் கலவை இன்டீரியர் தீம் கொண்டதாக இருக்கிறது. புதிய பீஜ் வண்ண லெதர் இருக்கையும் கவர்வதாக இருக்கும்.

நிசான் டெரானோ எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் தற்போது ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். பின்னர் வேறு புதிய வேரியண்ட்டுகளில் வர வாய்ப்புள்ளது. நிசான் டெரானோ எஸ்யூவியில் காமன் ரயில் டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108.62 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காருக்கு ரூ.25,000 முன்பணத்துடன் ஏற்கனவே முன்பதிவு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The all-new Nissan Terrano AMT has been launched in India for Rs. 13.75 lakh ex-showroom (Delhi). Nissan Terrano AMT will be available in an exclusive Sandstone Brown paint scheme.
Please Wait while comments are loading...

Latest Photos