பெட்ரோல் விலை உயர்ந்தது, டீசல் விலை குறைந்தது

Written By:

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது, டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த நிலையில், பெட்ரோலின் விலை 58 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலை 31 பைசா என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம், செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை மாற்றத்திற்கு பிறகு, இந்திய தலைநகர் டெல்லியில், 1 லிட்டர் பெட்ரோலின் விலை 64.05 ரூபாயாகவும், 1 லிட்டர் டீசலின் விலை 52.63 ரூபாயாகவும் இருக்கும்.

கடந்த முறை, பெட்ரோலிய பொருட்களின் விலை மற்றம் செய்யப்பட்ட போது, பெட்ரோல் விலை 3.38 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை 2.67 ரூபாய் என்ற அளவிலும் உயர்த்தப்பட்டது.

"அந்நிய செலாவணி பரிமாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றமும், சர்வதேச சந்தைகளில் பெட்ரோலின் விற்பனை விலையில் ஏற்பட்ட எழுச்சியும், டீசலின் விற்பனை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே இத்தகைய விலை மாற்றங்களுக்கு காரணமாக உள்ளன. இந்த விலை மாற்றத்தின் பாதிப்பு, வாடிக்கையாளர்கள் மீது கடத்தப்படுகிறது" என ஐஒசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கருத்து தெரிவித்தது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Fortnight has passed since fuel prices were revised in India and it is time again for next Price revision. Petrol Prices are hiked by 58 Paise Per Litre, Diesel prices are cut by 31 Paise Per Litre. These prices are effective 16 September 2016. During the last revision, petrol prices were hiked by Rs. 3.38 per litre and diesel by Rs. 2.67 per litre. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos