ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்: அமெரிக்காவில் அறிமுகம்!

By Saravana Rajan

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் சூப்பர் கார் வரை இப்போது பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த மின்சார வாகனங்களின் பயண தூரம் மிக குறைவாக இருப்பதுதான் வாகனத் துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்தநிலையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ தூரம் பயணிக்கும் பஸ் மாடல் ஒன்று அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார பஸ் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா என்ற நிறுவனம்தான் இந்த பஸ்சை அறிமுகம் செய்திருக்கிறது. புரொடெர்ரா கேட்டலிஸ்ட் FC மற்றும் XR ஆகிய வரிசையில் ஏற்கனவே பொது போக்குவரத்துக்கான எலக்ட்ரிக் பஸ்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு புரொடெர்ரா பஸ்களின் விற்பனை 220 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பொது போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் E2 என்ற வரிசையில் புதிய பஸ் மாடலை புரொடெர்ரா அறிமுகம் செய்திருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

இந்த பஸ்சில் 440 முதல் 660 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தின்போது 966 கிமீ தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளதாம். அதேநேரத்தில், சாதாரண சூழலில் பயணிக்கும்போது பாரத்திற்கு தகுந்தவாறு 312 கிமீ தூரம் முதல் 563 கிமீ தூரம் வரை பயணிக்குமாம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

42 அடி நீளம் கொண்ட புரொடெர்ரா E2 பஸ்சில் 40 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டது. மேலும், எடை குறைப்பிற்காக கார்பன் ஃபைபர் கலவை கொண்ட உடற்கூடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

புரொடெர்ரா கேட்டலிஸ்ட் FC மற்றும் XR ஆகிய பஸ் மாடல்கள் நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே சிறந்தது. ஆனால், இந்த புதிய E2 பஸ்களை நடுத்தர மற்றும் நீண்ட தூர வழித்தடங்களிலும் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பஸ்சிற்கு பொது போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

எனவே, தெர்கு கரோலினா பகுதியில் உள்ள ஆலையின் உற்பத்தி திறனை இருமடங்காக உயர்த்த புரொடெர்ரா திட்டமிட்டுள்ளது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட பஸ்கள் 4.2 லட்சம் கிமீ தூரம் பயணித்துள்ளனவாம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

இதன்மூலமாக, 5.40 லட்சம் கேலன் டீசல் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று, 10 மில்லியன் பவுண்ட் கார்பன் புகை மாசு தவிர்க்கப்பட்டிருக்கிறதாம். புரொடெர்ரா E2 வரிசை மின்சார பஸ் மாடல்கள் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு இணையான செயல்திறனையும், பயண தூரத்தையும் வழங்கும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

எவ்வித சமரசமும் இருக்காது. அமெரிக்காவின் சாதாரண சாலைகளில் கூட இந்த பஸ்கள் ஓட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்," என்று புரொடெர்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியான் பாப்பிள் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பஸ் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்

கார் இன்ஸ்யூரன்ஸ் வாங்கலையோ, கார் இன்ஸ்யூரன்ஸ்!

Most Read Articles
English summary
Proterra Catalyst E2 Electric Bus covers Nearly 1000 KM In Test. Read in Tamil.
Story first published: Friday, September 16, 2016, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X