ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ரெனோ நிறுவனம், தங்களின் டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இந்தியாவில் இந்த அக்டோபர் மாதத்தில், தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் மிக கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தான், ரெனோ நிறுவனமும் இந்த டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகத்திற்கான காரணம்...

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், இந்த டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் என்ற ஸ்பெசல் எடிஷன் மாடலை, விற்பனையை கூட்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைக்கும் விதம்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல், ஏடபுள்யூடி அல்லது ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகவும், ஏடபுள்யூடி சிஸ்டம் இல்லாத வடிவிலும் கிடைக்கிறது.

மெக்கானிக்கல் மேம்பாடுகள்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலில், எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இஞ்ஜின்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல், 1.5 லிட்டர் டிசிஐ டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல், 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் என்ற 2 விதமான இஞ்ஜின் டியூனிங் தேர்வுகளில் கிடைக்கும்.

எக்ஸ்டீரியர்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலின் எக்ஸ்டீரியர், 2 விதமான தேர்வுகளில் கிடைக்கும். ஸ்லேட் கிரே, மூன்லைட் சில்வர், அவுட்பேக் பிரான்ஸ் ஆகியவை இந்த ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலின் சிறப்பு தேர்வுகளாக இருக்கும்.

சிறப்பு அம்சங்கள்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலை, கிளாஸ்ஸி பிளாக் ஃபிரன்ட் கிரில், பாடி கிளாட்டிங், ஃபாக் லேம்ப்கள், ஸ்பேஷல் ரூஃப் ரெயில்கள் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன் பேட்ஜ் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலின் கேபின் டெனிம் பிரபாவம் கொண்ட அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளது. இதன் ஸ்டீயரிங் வீல், லெதர் கொண்டு சுற்றப்பட்டுள்ளது.

மேலும், இதன் ஸ்டீயரிங் வீல், மஸ்டர்ட் எல்லோ ஸ்டிட்சிங் கொண்டுள்ளது. ரெனோ இஞ்ஜினியர்கள் இந்த மஸ்டர்ட் எல்லோ நிறத்தை டேஷ்போர்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றையும் தனித்துவமாக எடுத்துக்காட்ட உபயோகித்துள்ளனர்.

விலை;

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடலின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல் - 85 பிஎஸ் ஆர்எக்ஸ்இ - 9.65 லட்சம் ரூபாய்
ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல் - 85 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் - 10.45 லட்சம் ரூபாய்
ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிஷன் மாடல் - 110 பிஎஸ் ஆர்எக்ஸ்இசட் - 13.78 லட்சம் ரூபாய்

குறிப்பு; இந்த அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India has launched their Duster Adventure Edition for this 2016 festive season. French-based automobile manufacturer has introduced this special edition model to boost sales. Adventure Edition is offered with and without Renault Duster's All-Wheel Drive (AWD) system. No other mechanical changes are carried out in this Adventure Edition. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos