இந்தியாவை மையம் கொண்டுள்ள ரெனோ கேப்டர் எஸ்யூவி உற்பத்தி துவங்கியது

By Ravichandran

இந்தியாவை மையம் கொண்டுள்ள ரெனோ கேப்டர் எஸ்யூவியின் உற்பத்தி ரஷ்யாவில் துவங்கியது.

ரெனோ நிறுவனம், கேப்டர் என்ற எஸ்யூவியை தயாரித்து வழங்குகிறது. இதன் உற்பத்தி தற்போது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உற்பத்தி ஆலையில் துவங்கியுள்ளது. உலகளாவிய உற்பத்தி நிறுவனங்கள் பல, இதன் உற்பத்திக்கு தேவையான உதவிகளை பெற்று கொள்ளும். ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த ரெனோ நிறுவனம், அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஷ்யாவை தேர்வு செய்துள்ளது.

ரெனோ கேப்டர் எஸ்யூவி இந்திய வாகன சந்தைகளுக்கும் கொண்டு வரப்படும். இது ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி-க்கும் மேலே வகைபடுத்தபட்டுள்ளது. விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ரெனோ டஸ்ட்டர் மாடலில் உபயோகிக்கபடும் பல்வேறு கூறுகள், இந்த ரெனோ கேப்டர் எஸ்யூவியிலும் பகிர்ந்து கொள்ளபடும். ரெனோ நிறுவனம், இந்த ரெனோ கேப்டர் எஸ்யூவியை பிரத்யேகமாக வளரும் சந்தைகளுக்காகவே உருவாக்கியுள்ளது.

renault-kaptur-russia-moscow-production-commenced-india

ரெனோ கேப்டர் எஸ்யூவி இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும். ரெனோ கேப்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, ஹூண்டாய் டூஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல்களுடன் போட்டி போட உள்ளது. ரெனோ கேப்டர் எஸ்யூவி, 17 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்-க்கும் இடையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரெனோ கேப்டர் எஸ்யூவியில் எந்த இஞ்ஜின் உபயோகபடுத்தபடும் ரெனோ நிறுவனம் இது வரை உறுதி செய்யவில்லை. ரெனோ டஸ்ட்டர் மாடலில் உபயோகிக்கபடும் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தான் ரெனோ கேப்டர் எஸ்யூவியிலும் பிரயோகிக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

renault-kaptur-suv-russia-moscow-production-commenced-india-bound

மேலும், தேர்வு முறையிலான 2.0 டீசல் இஞ்ஜின் மாடலில் வழங்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது. கூடுதலாக, ரெனோ நிறுவனம் இந்த ரெனோ கேப்டர் எஸ்யூவியை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

renault-kaptur-russia-moscow-production-commenced-soon-india-bound
Most Read Articles
English summary
France Based Carmaker Renault has commenced production of its Kaptur SUV at its Moscow Production facility in Russia. The Kaptur SUV will come to Indian shores as well. It will be placed above Duster compact SUV model. Kaptur SUV is most likely to be launched in India by 2017. To know more about India Bound Renault Kaptur SUV, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X