ரெனோ கேப்டர் எஸ்யூவி, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யபட்டது

By Ravichandran

ரெனோ கேப்டர் எஸ்யூவி, இந்தியாவிற்குள் ஆர் அன்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக இறக்குமதி செய்யபட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி படி, ரெனோ கேப்டர் எஸ்யூவி, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டுள்ளது. ரெனோ கேப்டர் எஸ்யூவி, தற்போது வரை, உற்பத்திக்கு முந்தைய வடிவில் தான் உள்ளது. ரெனோ கேப்டர் எஸ்யூவி, ஹெச்ஹெச்ஏ (HHA) என்ற குறியீட்டு பெயருடன் (கோட் நேம்) தான் அழைக்கப்பட்டு வருகிறது.

renault-kaptur-suv-imported-india-from-russia-r-and-d-purposes

டிசைன் பொருத்த வரை, ரஷ்யாவில் விற்கப்படும் கேப்டர் (Kaptur) மாடல் ஆனது, ஐரோப்பாவில் விற்கப்படும் ரெனோ கேப்டர் (Renault Captur) மாடலை போன்றே உள்ளது. ஆனால், ஸ்டைலிங் முறைகள் தான், இந்த 2 மாடல்களையும் வேறுபடுத்துகின்றது. ரெனோ கேப்டர் (Kaptur) எஸ்யூவி, வளரும் சந்தைகளுக்காக உருவாக்கபட்டு வருகிறது. தற்போது உள்ள மாடலில் உள்ள பெரும்பாலான கூறுகள் அப்படியே ஏற்று கொள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரெனோ கேப்டர் (Kaptur) எஸ்யூவி, 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 113 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 156 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. கேப்டர் (Kaptur) எஸ்யூவியின் இஞ்ஜினை, ரெனோ இஞ்சினியர்கள் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைத்துள்ளனர்.

renault-kaptur-suv-import-india-from-russia-for-r-and-d-purposes

டஸ்ட்டர் மாடல் வடிவமைக்கபட்டுள்ள எம்ஓ பிளாட்ஃபார்ம் அடிப்படையாக கொண்டு தான், ரெனோ கேப்டர் (Kaptur) எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ வழங்கும் இந்த கேப்டர் (Kaptur) எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிஸான் டெர்ரானோ ஆகிய மாடல்களுடன் போட்டி போடா வேண்டி இருக்கும்.

வெகுவிரைவில், ரெனோ நிறுவனம், இந்தியாவில் இந்த ரெனோ கேப்டர் (Kaptur) எஸ்யூவியை டீசல் இஞ்ஜின் தேர்வுடனும் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

renault-kaptur-suv-imported-in-india-from-russia-r-and-d-purposes
Most Read Articles
English summary
Renault Kaptur SUV is imported to India for R & D Purposes. According to reports, France-based automobile manufacturer Renault has imported the Renault Kaptur from Russia to India. So far, this Kaptur is in pre-production avatar and is called codename HHA. In terms of design, Kaptur sold in Russia is similar to Renault Captur model sold in Europe. To know more, check here...
Story first published: Tuesday, May 31, 2016, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X