ரெனோ க்விட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ரெனோ க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவரும் பல சிறப்பம்சங்களுடன் மிகச் சரியான விலையில் வந்திருக்கும் இந்த கார் மாடலின் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட் மாடலாக இந்த ஏஎம்டி மாடல் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

ரூ.4.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ரெனோ க்விட் ஆட்டோமேட்டி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 24.04 கிமீ மைலேஜ் தரும் என்று ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலிருந்து ரெனோ க்விட் காரின் தனித்துவமான ஒரு புதிய அம்சத்துடன் வந்துள்ளது. அதாவது, கியர் மோடுகளை மாற்றுவதற்கு பதிலாக, திருகு அமைப்பில் எளிதாக கியர் மோடுகளை மாற்றுவதற்கான வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது சென்டர் கன்சோல் பகுதியிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெனோ க்விட் கார் 3,679மிமீ நீளமும், 1,579மிமீ அகலமும், 1,478மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,422மிமீ நீளமுடைய வீல் பேஸ் கொண்டுள்ளது. மேலும், 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், வேகத்தடைகளையும், பள்ளமேடான சாலைகளையும் கண்டு அச்சப்படும் அவசியமில்லை.

ரெனோ க்விட் காரின் மற்றொரு முக்கிய அம்சம், 300 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இருப்பதே. மேலும், பின் இருக்கையை மடக்கிக் கொண்டால் 1,115 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியை பெற முடியும். இந்த காரில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

இந்த காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும், புளூடூத் வசதியும் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

ஆர்எக்ஸ்டி என்ற டாப் வேரியண்டில் இந்த ஏஎம்டி மாடல் விற்பனைக்கு கிடைக்கும். இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை ஆர்எக்ஸ்டி என்ற பெயரில் ரெனோ நிறுவனம் குறிப்பிடுகிறது. ஃபியரி ரெட், ஐஸ் கூல் ஒயிட், மூன் லைட் சில்வர், அவுட்பேக் பிரான்ஸ் மற்றும் பிளானெட் கிரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, November 14, 2016, 9:48 [IST]
English summary
Renault has launched the AMT variant of the Kwid in India with the first in segment Shift Control AMT Dial instead of a normal gearstick.
Please Wait while comments are loading...

Latest Photos