குட் நியூஸ்... ரெனோ க்விட் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்குகிறது!

Written By:

ரெனோ க்விட் கார் பெரும் வரவேற்பை பெற்றது அறிந்ததே. முதலில் வந்த 800சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ரெனோ க்விட் கார் எகிடு தகிடான வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரெனோ க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த மாடலுக்கான முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு ரெனோ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் இன்று இரவு முதல் முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக கார்அண்ட்பைக் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள ரெனோ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரூ.10,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

அண்மையில் விற்பனைக்கு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இதே 1.0 லிட்டர் பொருத்தப்பட்ட மாடல் இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது.

ரெனோ க்விட் காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். Easy R என்ற பெயரில் குறிப்பிடப்படும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் சற்றே புதுமையான விதத்தில் வருகிறது.

அதாவது, ஏற்கனவே Easy R ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் டஸ்ட்டர் எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலில் வழக்கமான கியர் லிவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடலில் சாதாரண கியர் லிவர் கொடுக்காமல் டேஷ்போர்டில் இருக்கும் திருகு அமைப்பு மூலமாக மிக எளிதாக கியர் மோடுகளை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வருகிறது. இது வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் அம்சமாக இருக்கும்.

எனவே, ரெனோ க்விட் காரின் விற்பனையில் விரைவில் வரும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட சற்றே விலை அதிகமாக இருக்கும் என்பதால் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, November 2, 2016, 17:29 [IST]
English summary
Renault dealerships have started taking bookings for the upcoming AMT variant of the Kwid.
Please Wait while comments are loading...

Latest Photos