கிராஷ் டெஸ்ட்டில் மீண்டும் 'பல்பு' வாங்கிய ரெனோ க்விட்!

Written By:

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையி்ல, ரெனோ க்விட் கார் ஒரேயொரு நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 4 கார் மாடல்களை சில மாதங்களுக்கு முன் குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் நடத்தியது. அதில், ரெனோ க்விட் காரின் பேஸ் மாடல் உள்ளிட்ட 4 கார்களும் தர மதிப்பீட்டில் ஒரு நட்சத்திரத்தை கூட பெறாமல் பூஜ்யம் வாங்கின.

ரெனோ க்விட் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜ்யத்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது. இந்தியர்களின் மனம் கவர்ந்த ரெனோ க்விட் கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பல்பு வாங்கியது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது.

இந்தநிலையில், ஏர்பேக், விபத்தின்போது பயணிகளை காக்கும் ப்ரீடென்ஷனர் தொழில்நுட்பம் கொண்ட சீட் பெல்ட் உள்ளிட்ட உயர்வகை பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ரெனோ க்விட் காரை சமீபத்தில் குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது.

இதில், ரெனோ க்விட் கார் ஒரேயொரு நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்று மீண்டும் ஏமாற்றத்தை தந்துள்ளது. பெரியவர்களுக்கான தர மதிப்பீட்டில் ஒரு நட்சத்திர மதிப்பீட்டை மட்டுமே பெற்றிருக்கிறது. ஓட்டுனரின் நெஞ்சுப் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த கிராஷ் டெஸ்ட் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கிராஷ் டெஸ்ட் மூலமாக ரெனோ க்விட் காரின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Renault Kwid With Airbag Scores Just A Single Goal In The Latest Crash Test. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos