சென்னையில் உள்ள ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலை மூடபட்டுள்ளது

By Ravichandran

சென்னையில் உள்ள ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலை மூடபட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கார் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணி அமைக்கப்பட்டு, ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலை சென்னையில் ஓரகடம் என்ற பகுதியில் அமைக்கபட்டுள்ளது.

மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளின் காரணமாக, சென்னையில் உள்ள ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலை மூடப்பட்டிருக்கும் என ரெனோ-நிஸான் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உற்பத்தி ஆலை மூடபட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்கையில், "ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலை, மே 22 - மே 29 2016 முதல் பராமறிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும். இத்தகைய பராபரிப்பு பணிகள், மே மாதத்தில் ஒரு முறை, டிசம்பர் மாதத்தில் ஒரு முறை என 2 முறைகள் மூடப்பட்டிருக்கும். இந்த ஆலை மூடல் நடவடிக்கைகள் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளபடுகிறது" என ரெனோ-நிஸான் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அறிவித்துள்ளது.

renault-nissan-chennai-car-plant-shuts-down-for-one-week

ரெனோ-நிஸான் கூட்டணியில் அமைக்கப்பட்ட இந்த உற்பத்தி ஆலையை நிறுவ 45 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யபட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்த உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு வருடத்திற்கு 4.8 லட்சம் கார்கள் தயாரிக்கபட்டு வெளியாகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான், இந்த ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு மில்லியனாவது கார் தயாரிக்கபட்டு வெளியானது.

விற்பனையில் பட்டையை கிளப்பி வரும் ரெனோ க்விட் மாடல் கூட, சென்னையில் ஓரகடம் பகுதியில் உள்ள இந்த ரெனோ-நிஸான் உற்பத்தி ஆலையில் தான் உற்பத்தி செய்யபடுகிறது. ரெனோ க்விட் மாடல், அதிக காத்திருப்பு காலத்துடன் தான் கிடைத்து வருகிறது. இந்த காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், சமீபத்தில் தான் கூடுதலாக 3-வது ஷிஃப்ட்திலும் உற்பத்தி துவக்கபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Renault-Nissan shuts down the Renault-Nissan factory at Oragadam near Chennai will remain closed for a week from May 22 to May 29, 2016. Renault-Nissan Automotive India stated that this plant will remain closed for period of a week as part of scheduled May maintenance. To know more about temporary shut down of Renault-Nissan factory, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X