சென்னை ரெனோ- நிசான் ஆலையில் 800 பேர் வேலை இழக்கும் அபாயம்!

Written By:

ஜப்பானை சேர்ந்த நிறுவனமும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனமும் சர்வதேச அளவில் கூட்டணி நிறுவனமாக செயல்படுகின்றன. உலக அளவில் இந்த கூட்டணிக்கு பல கார் ஆலைகள் உள்ளன.

அந்த வகையில், சென்னை ஒரகடத்திலும் ரெனோ- நிசான் நிறுவனங்களின் கூட்டணி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரெனோ, நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளின் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் இந்த ஆலையிலிருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டு பிரச்னை இந்த கூட்டணிக்கு பெரும் சோதனையாக அமைந்துவிட்டது.

ஆம், நிசான் மற்றும் ரெனோ நிறுவனங்களின் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள டீலர்ஷிப்புகளில் 20,000க்கும் அதிகமான கார்கள் இருப்பில் தேங்கி விட்டன. கடந்த ஒரு வாரத்தில் நிசான் நிறுவனம் வெறும் 50 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாம்.

மேலும், டீலர்ஷிப்புகளிலும், யார்டிலும் 3,450 டட்சன் ரெடி- கோ கார்களும், 5,260 ரெனோ க்விட் கார்களும் தேங்கி நிற்கின்றனவாம். அதேபோன்று, அந்த நிறுவனங்களின் பல கார் மாடல்களும் இருப்பில் தேங்கிவிட்டன.

இதையடுத்து, மூன்று ஷிஃப்ட்டுகளில் விறுவிறுப்பாக நடந்து வந்த கார் உற்பத்தி தற்போது இரண்டு ஷிஃப்டுகளாக குறைக்கப்பட உள்ளதாக ரெனோ- நிசான் கூட்டணி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 800 தற்காலிக பணியாளர்களை வேலையிலிருந்து விடுவிக்க இருப்பதாக ரெனோ- நிசான் கூட்டணி முடிவு செய்துள்ளது. மொத்தமாக 1,980 பணியாளர்கள் வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், நிரந்தர பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களுக்கு வேறு பிரிவுகளில் பணிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் ரெனோ- நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெனோ- நிசான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Renault-Nissan production plant in Tamil Nadu has decided to end the third shit in the factory.
Please Wait while comments are loading...

Latest Photos