புதுப்பொலிவுடன் புதிய ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

Written By:

சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்தில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களுக்கு புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். ஆக்டாவியா, சூப்பர்ப் கார்களை தொடர்ந்து தற்போது ரேபிட் காருக்கும் புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்திருக்கிறது ஸ்கோடா நிறுவனம்.

2011ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஸ்கோடா ரேபிட் காருக்கு போட்டியாளர்கள் அதிகரித்து விட்ட நிலையில், மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் அவசியமாகி உள்ளது.

தற்போது ஸ்கோடா ரேபிட் காரின் டிசைன் புதிய தலைமுறை சூப்பர்ப், ஆக்டாவியா மாடல்களை போன்று மாறியிருக்கிறது. குறிப்பாக, புதிய ஸ்கோடா ரேபிட் காரின் முகப்பு க்ரில் மற்றும் ஹெட்லைட்டுகள் அழகாக இணைந்தது போல் இருக்கின்றன. பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள் புதிது.

பின்புறத்தில் புதிய டெயில் லைட்டுகள், ரியர் ஸ்பாய்லர் போன்றவை காரின் அழகுக்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்.

 

 

உட்புறம் அதிக இடவசதி கொண்டதாகம மாறியிருக்கிறது. இரட்டை வண்ணக் கலவையில் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஜிபிஎஸ் நேவிகேஷன் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், மலைப்பாதையில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற வசதிள் உள்ளன. இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு வசதியாக உள்ளது.

இந்த காரில் 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கேப்புசினோ பீஜ், கார்பன் ஸ்டீல், சில்க் புளூ, ஃப்ளாஷ் ரெட் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 153என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 108 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும்.

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 15.41 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.84 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.13 கிமீ மைலேஜயும், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.72 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் மாடல் ரூ.8.35 லட்சம் முதல் ரூ.11.46 லட்சம் வரையிலான மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.9.57 லட்சம் முதல் ரூ.12.78 லட்சம் வரையிலான மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

English summary
Skoda has launched the new Rapid sedan in India, five years after the Rapid was first launched in 2011.
Please Wait while comments are loading...

Latest Photos