ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

ஸ்கோடா நிறுவனம் தயாரிக்கும் ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன் தொடர்பான அதிகப்படியான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தது நான்கு கார் மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டம் கொண்டுள்ளதாக தெரிவித்தது.

இதில், ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனும் ஒன்றாக இருக்கும்.

மான்டிகார்லோ எடிஷன்;

மான்டிகார்லோ எடிஷன்;

ஐரோப்பிய வாகன சந்தைகளில், மான்டிகார்லோ எடிஷன் பேக்கேஜ்ஜானது ஃபாபியா, ரேபிட் மற்றும் யெட்டி ஆகிய மாடல்களில் கிடைக்கிறது.

மான்டிகார்லோ எடிஷன் பேக்கேஜ் என்பது ஸ்கோடாவின் ரேசிங் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதில் சில கவரும் வகையிலான மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

முக்கியமான மாற்றங்கள்;

முக்கியமான மாற்றங்கள்;

ஸ்டைலான பிளாக் ஆக்ஸன்ட்கள் உடைய ஸ்பெஷலான ரெட் நிறம் தான், ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனில் மிக முக்கியமான மாற்றமாக உள்ளது.

இந்த பிளாக் ஆக்ஸன்ட்கள், ஃபிரண்ட் கிரில், அல்லாய் வீல்கள், பாடி ஆக்ஸன்ட், ஓஆர்விஎம் மற்றும் டெயில் லேம்ப் கிளஸ்டர் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனின் இன்டீரியரில் பிளாக், கிரே மற்றும் ரெட் ஆகிய நிறங்களிலான அப்ஹோல்ஸ்ட்ரி உடைய ஸ்போர்ட்டியான பக்கெட் சீட்கள் உள்ளன.

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனின் ஈர்ப்புதன்மையை கூட்டுவதற்கு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள் மற்றும் கார்பன் ஃபைபர் டேஷ்போர்ட் ட்ரிம்களை சேர்க்க ஸ்கோடா நிறுவனம் முடிவு செய்தது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனில், பிரத்யேகமாக ஸ்போர்ட்டியான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரெட் ஸ்டிட்ச்கள் உடைய லெதர் கொண்டு மூடப்பட்ட மல்டிஃபங்க்ஷன் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பொலிவு கூட்டப்பட்ட மற்றும் ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன், 1.5 லிட்டர் டர்போ டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்கள் கொண்டிருக்கும். இதே இஞ்ஜின்கள் தான், ஃ போக்ஸ்வேகன் மாடலிலும் பகிரப்பட்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனின் 1.5 லிட்டர் டர்போ டீசல் இஞ்ஜின், 104 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷனின் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின், 104 பிஹெச்பியையும், 153 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன், 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரேபிட் தொடர்புடைய செய்திகள்

ஸ்கோடா தொடர்புடைய செய்திகள்

யெட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Skoda Rapid Monte Carlo Edition would be launched in India soon. Skoda Auto recently announced about the launch of 4 new products in India by end of 2017. Monte Carlo edition Skoda Rapid is one among them. In European markets, Monte Carlo edition package is available for Fabia, Rapid, and Yeti. This package is offered as homage to Skoda's racing heritage. To know more, check here...
Story first published: Thursday, August 4, 2016, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X