15 நிமிட சார்ஜில் 480 கிமீ பயணம்... தயாராகிறது ஸ்கோடாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!

By Meena

வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற கார்களில் ஸ்கோடா நிறுனத்தின் தயாரிப்புகளும் முதல் வரிசையில் இருக்கும். ப்ரீமியம் மாடல் கார்கள் மார்க்கெட்டில் ஸ்கோடாவுக்கும் தனி இடமுண்டு.

பொதுவாகவே, என்னதான் சொகுசு வண்டியாக இருந்தாலும் மைலேஜ் என்ற விஷயத்துக்குத்தான் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் தருவார்கள். எந்தக் காரை வாங்கலாம் என யோசிக்கும்போதே, அவர்களது மனதை மாற்றுவதில் முக்கிய ரோல் மைலேஜுக்கு உள்ளது.

ஸ்கோடா எஸ்யூவி

உண்மைதான்... விற்கும் விலைவாசியில் பெட்ரோல், டீசல் போட்டு கட்டுபடியாகவில்லை என்பதுதானே பெரும்பாலானோரது ஆதங்கம். பேசமாக எலெக்ட்ரிக் வண்டி வாங்கிட்டுப் போயிடலாம் என்று பேச்சுக்கு சொன்னாலும், இதுவரை பெரிய நிறுவனங்கள் எதுவும் அதிக அளவில் எலெக்ட்ரிக் மாடலில் புதிய கார்களை அறிமுகப்படுத்தவில்லை. அதன் காரணமாகத் தான் மக்கள் இன்னமும் பெட்ரோல், டீசல் எஞ்சின் கார்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஸ்கோடா நிறுவனம், முழுக்க முழுக்க பேட்டரியால் இயங்கக்கூடிய பக்கா எஸ்யூவி மாடல் காரை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. ஃபோக்ஸ் வேகன் நிறுவன எம்இபி பேட்டரி பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு ஸ்கோடாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வடிவமைக்கப்படவுள்ளது.

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 480 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கக் கூடிய வகையில் அது வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இரவும் பகலும் ஸ்கோடா நிறுவன எஞ்சினியர்கள் மூளையைக் கசக்கி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

2020-ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் எஸ்யூவியை மார்க்கெட்டில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்கோடா இறங்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள மாடல்களை எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் வகையில் மாற்றுவது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Skoda To Unveil Its First Electric SUV In 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X