மாருதி இக்னிஸ் காரில் இடம்பெற இருக்கும் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

Written By:

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் கலக்கி வரும் மாருதி கார் நிறுவனம் சற்றே கூடுதல் விலையில் பிரிமியம் மாடல்களை அறிமுகம் செய்வதிலும் இப்போது முனைப்பு காட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இக்னிஸ் என்ற புதிய காம்பேக்ட் ரக கார் மாடலை ஜனவரி 13ந் தேதி மார்க்கெட்டில் விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

கைக்கு தோதான விலையில் வித்தியாசமான தோற்றம் மற்றும் அதிக வசதிகளுடன் வரும் மாருதி இக்னிஸ் மாருதி பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்தத நிலையில், இந்த கார் பற்றிய முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய மாருதி இக்னிஸ் கார் இலகு எடை கொண்ட புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது மட்டுமல்லாது, மிக உறுதியான கட்டமைப்பை பெற்றிருக்கும். பயணிகளுக்கு இது மிகவும் பாதுகாப்பான காராக இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் வருகிறது. மேலும், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோபிக்ஸ் பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. பாதசாரிகளுக்கான பாதுகாப்பு தர நிர்ணயத்திற்கு ஏதுவானதாக வருகிறது.

ஹெட்லைட்

புதிய மாருதி இக்னிஸ் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் வருகிறது. இதுதவிர, எல்இடி பகல்நேர நிளக்குகளும் இடம்பெற்று இருக்கும். இந்த செக்மென்ட்டிலேயே இந்த காரில்தான் எல்இடி ஹெட்லைட் இடம்பெற இருக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இது கிராஸ்ஓவர் ரகத்திலான கார் மாடலாக வருகிறது. அத்துடன், இந்திய சாலைகளுக்கு தக்கவாறு 180மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக வருகிறது. மேடுபள்ளமான சாலைகளிலும் எளிதாக ஓட்டுவதற்கு இந்த கார் சிறப்பானதாக இருக்கும்.

அலாய் வீல்கள்

இந்த காரில் 15 அங்குல கலப்பு உலோக சக்கரங்கள் பயன்படுத்தப்படும். இந்த சக்கரங்கள் காருக்கு கம்பீரத்தை தரும். மேலும், பல விதமான வடிவங்களில் அலாய் வீல்கள் வரும் என்றும், வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைனில் அலாய் வீல்களை தேர்வு செய்து பொருத்திக் கொள்ள முடியும் என்றும் தெரியும். இந்த காரில் 175/65 R15 டயர்கள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

கஸ்டமைஸ் ஆப்ஷன்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்றே இந்த புதிய மாருதி இக்னிஸ் காரும் இரட்டை வண்ணக் கலவையில் வருகிறது. காரின் பாடி ஒரு வண்ணத்திலும், கூரை மற்றொரு வண்ணத்திலும் இருக்கும். நீல வண்ணக் காருக்கு வெள்ளை அல்லது கருப்பு வண்ணக் கூரையிலும், சிவப்பு கார் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட கூரை கொண்டதாகவும் வருகிறது. ஐ-கிரியேட் என்ற அலங்கார ஆக்சஸெரீகள் பேக்கேஜையும் மாருதி வழங்கும்.

பூட் ரூம்

மாருதி ஸ்விஃட், ரிட்ஸ் உள்ளிட்ட ஹேட்ச்பேக் கார்களின் பூட் ரூம் குறைவாக இருக்கிறது என்ற பேச்சு உண்டு. இந்த காரில் 260 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடம்பெற்று இருக்கிறது. பின்புற இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் தனித்தனியாக மடக்கிக் கொள்ளலாம். அப்போது, இந்த காரின் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி அதிகரித்துக் கொள்ள முடியும்.

முக்கிய சிறப்பம்சங்கள்

மாருதி இக்னிஸ் காரின் டாப் வேரியண்ட்டில் பல நவீன தொழில்நுட்ப மற்றும் விசேஷ வசதிகள் இருக்கும். அதை கீழே காணலாம்.

  • புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்
  • எல்இடி பகல்நேர விளக்குகள்
  • எஸ்யூவி கார் போன்று காரை சுற்றிலும் கருப்பு வண்ண பிளாஸ்டிங் கிளாடிங் எனப்படும் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கும்.
  • கீ லெஸ் என்ட்ரி வசதி
  • புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி
  • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
  • 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Some Best In Class Features In Maruti Ignis.
Please Wait while comments are loading...

Latest Photos