தங்களுக்கு தெரியாத சட்டமில்லை... அப்படியே இதெல்லாம் தெரியுமான்னு பார்த்துக்கோங்க!

பெரும்பாலானவர்களுக்கு தெரியாத போக்குவரத்து விதிமீறல்களும், அதற்கான விபரங்களும் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

Written By:

சாலை போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை இந்தியாவில் நிலவுகிறது. இதனால், பல்வேறு நடைமுறை பிரச்னைகளை அனைவரும் சந்திக்கும் நிலை இருக்கிறது.

மேலும், சில விதிமீறல்கள் பற்றியும், அதற்கான அபராதங்கள் பற்றியும் கூட தெரியாத நிலை உண்டு. அந்த வகையில், பெரும்பாலானவர்களுக்கு தெரியாத சாலை விதிகள் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பார்க்கிங் வளாகங்கள் அல்லது சாலைகளில் பார்க்கிங் செய்திருக்கும்போது, உங்களது வாகனத்தை எடுக்க முடியாதபடி முன்னால் வாகனத்தை நிறுத்துவது விதிமீறிய செயல். இதுகுறித்து போலீசில் புகார் தரலாம். இதுபோன்று நிறுத்தி வைப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

உங்களது வாகனத்தில் ஹாரன் இல்லாமல் அல்லது ஹாரன் சரிவர இயங்காத நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ரூ.100 அபராதம் விதிக்க போக்குவரத்து சட்டத்தில் இடமுண்டு.

சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் விபத்தின்போது வாகனத்தில் வரும் பயணிகள் காயமடைந்தால் முதலுதவி பெட்டி வாகனத்தில் இருப்பது அவசியம் என்பதோடு, சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். அவ்வாறு, முதலுதவி அளிக்க தவறும்பட்சத்தில், ரூ500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் காருக்குள் புகைப்பிடிப்பது குற்றம். காருக்குள் புகைப்பிடித்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

கொல்கத்தாவில் பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இடையூறாக வாகனத்தை நிறுத்துவது விதிமீறிய செயல். அவ்வாறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நண்பரின் காரை இரவல் வாங்கிச் செல்வது குறித்து நண்பருக்கு தகவல் சொல்லிய பிறகே எடுத்துச் செல்வது அவசியம். நண்பரின் காரை நீங்கள் எடுத்துச் செல்வது அவருக்கு தெரியாமல் இருந்து, அவர் போலீசில் புகார் அளித்தால் மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மும்பையில் காரின் டேஷ்போர்டில் டிவி அல்லது வீடியோ சாதனங்களை பொருத்துவது விதிமீறிய செயலாகும். அவ்வாறு செய்யும்போது ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

மும்பையில், கார் எஞ்சினை ஐட்லிங்கில் ஓட விட்டு விட்டு காரை விட்டு வெளியே செல்வது விதிமீறிய செயல். இதற்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் உங்களது பைக் அல்லது கார் போன்ற வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும். உங்களது அனுமதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இவ்வாறு பயன்படுத்த அனுமதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

ஹெல்மெட் அணியாமல் செல்லும்போதோ அல்லது இதர விதிமீறலுக்காக ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசீது உங்களது கையில் இருந்தால், அந்த நாள் முழுவதும் அதே விதிமீறலுக்காக மீண்டும் அபராதம் விதிக்கப்பட மாட்டாது. இது ஊக்குவிக்கும் நோக்கத்தில் தரப்படவில்லை. எனினும், உடனடியாக ரசீது வாங்குவது அவசியம் என்பதை வலியுறுத்தவே வழங்கி உள்ளோம்.

மோட்டார் பொருத்தப்படாத சாதாரண ரிக்ஷா, மிதிவண்டி போன்ற வாகனங்களுக்கு போக்குவரத்து சட்டத்தில் அபராத விதிமுறைகள் எதுவும் இல்லை.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Some Unknown Traffic Laws In India.
Please Wait while comments are loading...

Latest Photos