எமது கேமரா கண்ணில் சிக்கிய ஜீப் ரெனிகேட் எஸ்யூவி: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

Written By:

அமெரிக்காவின் பாரம்பரியம் மிக்க ஜீப் எஸ்யூவி நிறுவனம் நேற்று முன்தினம் இந்தியாவில் களமிறங்கியது. ஜீப் செரோக்கீ, ஜீப் ரேங்லர், ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி ஆகிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, மேலும் பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஜீப் ரெனிகேட் எஸ்யூவி எமது கேமரா கண்ணில் சிக்கியது.

அடையாளங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், ஜீப் நிறுவனத்தின் பிரத்யேக டிசைன் தாத்பரியங்கள் மூலமாக இது ரெனிகேட் எஸ்யூவி என்பதை உடனே உறுதிப்படுத்த முடிந்தது.

ஜீப் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களின் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் கம்பீரமான முகப்பு கிரில் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட்டுகள், பெரிய ஏர்டேம் போன்றவை குறிப்பிட்டு கூற வேண்டியவை.

அதிக இடைவெளியும் கம்பீரமான வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த எஸ்யூவியில் 10 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 

 

பின்புறத்தில் ஸ்பாய்லர், பெரிய பம்பர் போன்றவை இருந்தாலும், இதன் டெயில் லைட் கிளஸ்ட்டர் சற்று சிறியதாகவே தெரிகிறது.

ஜீப் நிறுவனத்தின் இந்த எஸ்யூவியில் 1.4 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், தகவல்களின்படி, இந்தியாவில் சோதனை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இந்த ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜீப் நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த ரெனிகேட் மீது உள்ளது.

மேலும், இந்த புதிய எஸ்யூவி தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருவதால், அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

 

 

  

Story first published: Thursday, September 1, 2016, 10:45 [IST]
English summary
Spy Pics: Jeep Renegade Spotted Testing Once Again.
Please Wait while comments are loading...

Latest Photos