கேமராவில் சிக்கிய ஜாகுவார் புதிய எஸ்யூவி மாடல் கார்...!!

By Meena

கார் மார்க்கெட்டில் சிறப்பிடத்தைப் பிடித்து தனிக் காட்டு ராஜாவாக வலம் வரும் ஜாகுவார் நிறுவனம், எஸ்யூவி செக்மெண்டில் முழு வீச்சில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஜாகுவார் நிறுவனத்தின் எஃப் - பேஸ் எஸ்யூவி கார் சர்வதேச மார்க்கெட்டில் நன்மதிப்பையும், கணிசமான விற்பனையையும் கொண்டுள்ளது.

வெகு விரைவில் அந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகுவார் தயாரிப்பு கார்களுக்கு இங்கு உள்ள வரவேற்பைக் கருத்தில் கொண்டு எஸ்யூவி மாடலான எஃப் - பேஸை இந்தியாவில் களமிறக்கக் காத்திருக்கிறது அந்நிறுவனம். முன் ஆய்ந்து, பின் பாயும் சிறுத்தையின் குணம் போல...

ஆனால், இப்போது இன்னொரு விஷயம் ஆட்டோ மொபைல் ஆர்வலர்களின் கண்ணில் வசமாகச் சிக்கியுள்ளது. அதாவது, ஜாகுவார் நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகிற சிறிய ரக எஸ்யூவி மாடல் கார்தான் அது. அந்தக் காரின் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது சிலர் அதை படம் எடுத்துள்ளனர்.

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

அந்த ஸ்பை பிக்சர்கள் தற்போது வெளியாகி ஆட்டோ மொபைல் உலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஜாகுவாரின் புதிய எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம்தான் அதற்குக் காரணம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

எஃப் - பேஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய எஸ்யூவி இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், புகைப்படங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் ஆகிய கார்களின் அம்சங்களை இது கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

முன் வீல் டிரைவ் வசதி இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. டர்போ சார்ஜ் தொழில்நுட்பத்திலான 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்கள் ஜாகுவார் புதிய எஸ்யூவியில் மார்க்கெட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

 பெயர்

பெயர்

இந்த மாடலுக்கு இ - பேஸ் எனப் பெயரிடப்படலாம் என்ற யூகத் தகவல்களும் வேகமாகப் பரவி வருகின்றன. ஜாகுவாரின் இந்த புதிய எஸ்யூவி 2018-ஆம் ஆண்டு மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

விலை

விலை

இந்திய மதிப்பில் அதன் விலை ரூ.24.75 லட்சமாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இப்போதே இந்த ஜாகுவார் மினி எஸ்யூவியை கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆவல்

ஆவல்

அறிமுகமாவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகப் பேசப்படும் மாடலான ஜாகுவார் புதிய எஸ்யூவி, மார்க்கெட்டுக்கு வந்தால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Source

Most Read Articles
English summary
Spy Pics: Smaller Jaguar SUV Based On F-Pace Spotted Testing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X