சென்னையில் சோதனை செய்யப்பட்ட சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

சென்னையில் சோதனை செய்யப்பட்ட சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் ஸ்பை படங்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர் அனுப்பியிருக்கிறார். அந்த படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சென்னையில் ரகசியமாக சோதனை செய்யப்பட்ட புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியை டிரைவ்ஸ்பார்க் வாசகர் ஒருவர் படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.

அங்க அடையாளங்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்ட நிலையில், அந்த எஸ்யூவி சோதனை செய்யப்பட்டிருக்கிறது. எமது வாசகர் அனுப்பிய ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடக்கூடிய வடிவமைப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 4,202மிமீ நீளமும், 1,798மிமீ அகலமும், 1,590மிமீ உயரமும் கொண்டது, 2,600மிமீ வீல் பேஸ் உடையது.

புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் கொண்டது. உட்புறத்தை பொறுத்தவரையில், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இதன் சிறப்பாக இருக்கின்றன.

இந்த எஸ்யூவி 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு எஞ்சின்களுமே சாங்யாங் நிறுவனத்திற்காக மஹிந்திரா தயாரித்து கொடுத்துள்ளது. பெட்ரோல் எஞ்சின் 126 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.

புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

 

எனினும், சாங்யாங் டிவோலி எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில், சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடலை தயாரிக்கும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளதே இந்த குழப்பத்திற்கு காரணம். வரும் 2018ம் ஆண்டில் அந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சாங்யாங் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான டிவோலி தற்போது இந்திய மண்ணிலும் தென்பட்டிருப்பது எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுபோன்று ரகசியமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும் கார்களின் ஸ்பை படங்களை எமது கீழ்கண்ட இ-மெயில் முகவரிக்கும் அல்லது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸ் மூலமாக அனுப்புங்கள். உங்களது பெயர் மற்றும் உரிய விபரங்களுடன் உங்களது படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் வெளியிட காத்திருக்கிறோம்.

ஸ்பை படங்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
saravanarajan.mk@oneindia.co.in

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, December 12, 2016, 11:04 [IST]
English summary
Ssangyong's compact SUV, the Tivoli has been spotted testing in India.
Please Wait while comments are loading...

Latest Photos