கார் விற்பனையில் ஜொலிக்கும் தென் மாநிலங்கள்... தமிழகத்தின் பங்கு என்ன?

கார் விற்பனையில் தென் மாநிலங்கள் ஜொலித்து வருகின்றன. அதுகுறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

உலக அளவில் கார் விற்பனை வளர்ச்சியில் இந்தியா மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. நம் நாட்டின் கார் விற்பனை வளர்ச்சியை பார்த்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், நம் நாட்டு கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மேற்கு பிராந்தியமும், தெற்கு பிராந்தியமும்தான் வழங்கி வருகின்றன. மேலும், இந்திய அளவில் பார்க்கும்போது கார் விற்பனையில் தமிழகம் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

நாட்டிலேயே கார் விற்பனையில் மஹாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது. கடந்த ஏப்ரல்- செப்டம்பர் இடையிலான காலக் கட்டத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிக கார்கள் விற்பனையாகி உள்ளன. ஏப்ரல்- செப்டம்பர் இடையில் 1,92,936 கார்கள் விற்பனையாகி உள்ளன.

இரண்டாம் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. நிலப்பரப்பில் சிறியதாக இருந்தாலும், கார் விற்பனையில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது கேரளா. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அங்கு 1,25,437 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு 1,24,450 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் கர்நாடாகா உள்ளது. அங்கு ஏப்ரல்- செப்டம்பர் காலக்கட்டத்தில் 1,23,563 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஐந்தாவது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. ஏப்ரல்- செப்டம்பர் காலக்கட்டத்தில் 1,13,998 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கார் விற்பனையில் ஆறாவது இடத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் தமிழகத்தில் 1,11,999 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

தலைநகர் டெல்லி ஏழாவது இடத்தில் உள்ளது. அங்கு 99,804 கார்களும், எட்டாவது இடத்தில் உள்ள ஹரியானாவில் 80,175 கார்களும் உள்ளன. ஒன்பதாம் இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 67,620 கார்களும், 10வது இடத்தில் உள்ள தெலங்கானாவில் 59,271 கார்களும் விற்பனையாகி உள்ளன.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் நாட்டின் கார் விற்பனையில் தென் மாநிலங்கள்தான் அதிக பங்களிப்பை வழங்கி உள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, புதுச்சேரி, ஆந்திரபிரதேசம் உள்ளடக்கிய தென் மாநிலங்களில் 4,67,241 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விற்பனையில் 31 சதவீதமாகும்.

ஏப்ரல்- செப்டம்பர் காலக் கட்டத்தில் கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளடக்கிய மேற்கு பிராந்தியத்தில் 4,58,688 கார்கள் விற்பனையாகி உள்ளன. நாட்டின் மொத்த விற்பனையில் இதுவும் 31 சதவீதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளடக்கிய வடக்கு பிராந்திய மாநிலங்களில் 4,04,687 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த விற்பனையில் 27 சதவீத பங்களிப்பாக இருக்கிறது.

அந்தமான் நிகோபர் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், மணிப்பூர், ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிஷா, திரிபுரா, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய மாநிலங்களில் 1,62,036 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 11 சதவீத பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தென் இந்தியாதான் கார் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடாக ஆகிய மூன்று மாநிலங்களும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியையும் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
State-wise Car Sales Statistics.
Please Wait while comments are loading...

Latest Photos