இந்த ஆண்டில் அறிமுகமான 3 முத்தான சூப்பர் ஹிட் கார் மாடல்கள்!

Written By:

டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ பரபரப்புடன் துவங்கிய இந்த ஆண்டு பல புதிய கார் மாடல்களுக்கு வழி வகுத்து கொடுத்தது. கடும் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக தொடர்ந்து புதிய மாடல்கள் வரவு இடைவிடாது தொடர்ந்து இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்களில் சில குறிப்பிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் ஆதரவை பெற்றதுடன், விற்பனையிலும் பட்டையை கிளப்பின. அவ்வாறு, இந்த ஆண்டு விற்பனையில் சக்கை போட்டு போட்ட மூன்று முத்தான புதிய கார் மாடல்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

பெரும் எதிர்பார்ப்புடன் மாருதி நிறுவனம் களமிறக்கிய எஸ் க்ராஸ் கார் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, 4 மீட்டருக்கும் குறைவான மார்க்கெட்டில் புத்தம் புதிய மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை களமிறக்கியது. மேலும், தனது நெக்ஸா பிரிமியம் ஷோரூமை தவிர்த்து, தனது சாதாரண ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்கு விட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட உடனே மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சூப்பர் ஹிட் மாடலாக மாறியது. முன்பதிவும் மலை போல் குவிந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை 1.72 லட்சம் முன்பதிவுகளை குவித்து சாதனை படைத்தது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புக்கும் வசதிகள், எஸ்யூவி ரகத்துக்குரிய தோற்றம், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை மாருதி பிரெஸ்ஸாவுக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

இதுவரை 83,000 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையு், 200 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா கார் 24.3 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

2 உயிர் காக்கும் காற்றுப் பைகள், பிரேக் பவரை சரியாக செலுத்தும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், நெடுஞ்சாலைகளில் காரை சீரான வேகத்தில் இயக்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மழை வந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் என வசதிகளுக்கும் குறைவில்லை.

இவை எல்லாவற்றையும் விட ரூ.7.19 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் கிடைப்பதும் இந்த காருக்கு பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது. கடும் போட்டிக்கு மத்தியில் 2017ம் ஆண்டின் சிறந்த காருக்கான விருதையும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

இந்தியர்களின் மனம் கவர்ந்த எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவும் பல கூடுதல் அம்சங்கள் நிறைந்த புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இந்த ஆண்டு வந்த மாடல்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது.

மிடுக்கான தோற்றம், அதிக இடவசதி, நவீன தொழில்நுட்ப வசதிகள் என பிரிமியம் மாடலாகவே மாறி வாடிக்கையாளர்களை கவர்ந்தது இன்னோவா க்ரிஸ்ட்டா. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே முன்பதிவில் அசத்தி வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா. இதுவரை 50,000 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. லிட்டருக்கு 10.7 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டது.

டீசல் மாடல் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 172 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. பவர் மற்றும் ஈக்கோ என்ற இருவிதமான டிரைவிங் மோடுகளும் உண்டு.

8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்போர்ட் மற்றும் புளுடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. இரட்டை வண்ணக் கலவையிலான இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி என பட்டியல் நீள்கிறது.

ஏர்பேக்குகள், இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. பழைய மாடலைவிட விலை அதிகமாக வந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக இருப்பதே இந்த வரவேற்புக்கு காரணம். ரூ.13.72 லட்சம் விலையில் கிடைக்கிறது.

டாடா டியாகோ கார்

யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்க்கெட்டில் ஹிட் அடித்துள்ளது டாடா டியாகோ கார். சிறந்த தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதுமே ஆதரவு தருவார்கள் என்பதற்கு அடையாளமாக மாறியிருக்கிறது டாடா டியாகோ.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 6,000 டியாகோ கார்கள் விற்பனையாவதுடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் பாதியளவு பங்களிப்பை வழங்கி வருகிறது.

மிக குறைவான விலையில் சிறந்த வசதிகளை கொண்டிருப்பதுடன், மெச்சத் தகுந்த டிசைனும் இந்த காருக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகளாக அமைந்துள்ளன. ஹார்மன் மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், ஜுக் அப்ளிகேஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதுதவிர, இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 84 பிஎச்பி பவரையும்,114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சினும் இடம்பெற்றிருக்கின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக சவாலான விலையில் இந்த கார் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. விரைவில் ஏஎம்டி மாடலிலும் வர இருக்கிறது. அப்போது இந்த காருக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என நம்பலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The year 2016 has witnessed some of the best car launches in India. Here are the top selling cars in India in 2016.
Please Wait while comments are loading...

Latest Photos