புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

டாடா ஹெக்ஸா காரின் அறிமுக தேதி விபரம் வெளியான நிலையில், தற்போது டெலிவிரி எப்போது துவங்குகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

By Saravana Rajan

டாடா டியாகோ காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்ததாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்ஸா என்ற புதிய காரை அறிமுகப்படுத்த உள்ளது.

க்ராஸ்ஓவர் ரகத்தில் வரும் இந்த காருக்கு அதிக எதிர்பார்ப்பும் ஆவலும் எழுந்துள்ளது. இந்தநிலையில், டாடா ஹெக்ஸா கார் பற்றிய விபரங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

அடுத்த மாதம் 18ந் தேதி புதிய டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் கிடைத்தது. மேலும், ஜனவரி முதல் வாரத்தில் முன்பதிவு துவங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

ரூ.11,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களிலும் வருகிறது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

வேரிகோர் 300 என்ற மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே எஞ்சின் அதிக பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாற்றப்பட்ட மாடல் வேரிகோர் 400 என்ற பெயரில் வருகிறது. இந்த மாடல் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் ஆற்றலை செலுத்தும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் வருகிறது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

இந்த கார் 4,764மிமீ நீளமும், 1,895மிமீ அகலமும், 1,780மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,850மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் மூன்று வரிசை இருக்கைகளிலும் ஓரளவு நல்ல இடவசதியை அளிக்கும். மேலும், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

டாடா ஹெக்ஸா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்று இருக்கிறது. 19 அங்குல சக்கரங்கள் இந்த காருக்கு மிரட்டலான தோற்றத்தை தருவதாக இருக்கும். பின்புறத்தில் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய டாடா ஹெக்ஸா காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

உயிர் காக்கும் காற்றுப் பைகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது. ரூ.13 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The much-awaited premium SUV from Tata Motors, the Hexa has received good response from Indian customers.
Story first published: Saturday, December 24, 2016, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X