நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவி!

Written By:

தனது கார்களின் மீதான மோசமான பிராண்டு முத்திரையை மாற்றுவதற்கான முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. டாடா ஸெஸ்ட், போல்ட், டியாகோ ஆகிய கார்களின் மூலமாக இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. மேலும், அந்த கார்களின் டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

அதே பாணியில் தற்போது புதிய ஹெக்ஸா எஸ்யூவியையும் டாடா மோட்டார்ஸ் விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில நவீன தொழில்நுட்ப விஷயங்களை டாடா மோட்டார்ஸ் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியில் சூப்பர் டிரைவ் மோட்ஸ் என்ற புதிய வசதி இருக்கும். எஞ்சின் செயல்திறனை வெவ்வேறு விதத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வருகிறது. ஆட்டோ, கம்ஃபோர்ட், டைனமிக்ஸ் மற்றும் ரஃப் ரோடு ஆகிய நான்கு விதமான டிரைவிங் முறைகளை தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டோ மோடில் வைக்கும்போது, சாலைநிலைகளுக்கு தகுந்தவாறு எஞ்சினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தானாக இயங்கும். இதனால், மிகவும் பாதுகாப்பான பயணத்தை பெறமுடியும்.

நெடுஞ்சாலை பயணங்களுக்கு கம்போர்ட் மோடு சிறந்ததாக இருக்கும். சீரான வேகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு இது ஏதுவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டைனமிக் மோடில் வைக்கும்போது, அதிகபட்சமான பவரையும், செயல்திறனையும் வழங்கும். குறிப்பாக, டிரிஃப்ட் செய்வதற்கு இந்த மோடு வசதியாக இருக்கும். கரடுமுரடான சாலைகள் மற்றும் சாகச பயணங்களுக்கு ரஃப் ரோடு மோடு ஏதுவாக இருக்கும். வழுக்குத் தரைகளில் கூட மிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

மேலும், சென்டர் கன்சோலில் இருக்கும் ஒரு வட்ட வடிவிலான திருகு சுவிட்ச் மூலமாக எளிதாக மாற்ற முடியும். சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த வசதி, வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

டிரைவிங் மோட் மட்டுமின்றி, புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் கொடுக்கப்பட்டிருக்கும். இது காரை கவிழாமல் நிலைத்தன்மையுடன் இயக்குவதற்கு வழி வகுக்கும்.

அடுத்து டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலில் ரேஸ் கார் மேப்பிக் சிஸ்டம் தொழில்நுட்பமும் இருக்கும். இதன்மூலமாக, ஸ்போர்ட்ஸ் கார்களை போன்ற மிகச்சிறப்பான செயல்திறனை வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் இன்டீரியர் மிகவும் உயர்தரமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியில், 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் நவீன யுக கார் மாடலாக டாடா ஹெக்ஸா எஸ்யூவி வருகிறது. வரும் 19 மற்றும் 20ந் தேதிகளில் இந்த காரை ஹைதராபாத்தில் நடைபெறும் மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறோம்.  முழுமையான தகவல்களை அப்போது தருகிறோம்.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Tata Motors Reveal To Us An Interesting Feature In The Hexa MPV. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos