புதிய டாடா ஹெக்ஸா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

Written By:

டாடா டியாகோ கார் வெற்றிக்கு பின்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிக ஆவலை கிளப்பியிருக்கும் புதிய கார் டாடா ஹெக்ஸா. க்ராஸ்ஓவர் வகை மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஆகிய யுட்டிலிட்டி ரக கார்களுக்கு போட்டியாக வருவதே ஆவலுக்கு காரணம்.

இந்த நிலையில், புதிய டாடா ஹெக்ஸா காரின் அறிமுகம் தேதி மற்றும் இதர விபரக் குறிப்புகள் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளன. அந்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய டாடா ஹெக்ஸா காருக்கு முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்த மாதம் 18ந் தேதி இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய கார் மாடலில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 154 பிஎச்பி பவரையும் அளிக்கும் விதத்தில், இரண்டு விதமான சக்தியை வெளிப்படுத்தும் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதுதவிர, ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டாதகவும் வருகிறது. இதில், ஆல் வீல் டிரைவ் மாடல் ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

இது பிரிமியம் மாடலாக வருவதால் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை. வசதிகளை பொறுத்து 14 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. மேலும், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களிலும் தேர்வு செய்ய முடியும்.

குறைந்த வசதிகள் கொண்ட பேஸ் மாடல் ரூ,12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் மாடல் ரூ.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
All-new Hexa premium MPV by Tata Motors is most likely to launch in India on January 18, 2017. Bookings for Tata Hexa are open and have witnessed strong demand prior to launch.
Please Wait while comments are loading...

Latest Photos