டாடா ஹெக்ஸா எம்பிவி புக்கிங் விரைவில் துவக்கம்

டாடா ஹெக்ஸா எம்பிவி புக்கிங் பணிகள் சில நாட்களில் துவங்க உள்ளது. கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, http://hexa.tatamotors.com/ என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டாடா ஹெக்ஸா எம்பிவி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி, இதன் புக்கிங் பணிகள் இன்னும் சில நாட்களில் துவக்கப்படுகிறது. இந்தியாவில், தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் புதிய ஹெக்ஸா எம்பிவி அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டாடா ஹெக்ஸா எம்பிவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புக்கிங்;

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான், இந்த ஹெக்ஸா எம்பிவியை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், இந்த டாடா ஹெக்ஸா எம்பிவிக்கான புக்கிங்கை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் அலுவல் ரீதியான இணையதளத்தில், ஒரு மைக்ரோ சைட் துவக்கியுள்ளனர்.

பிரச்சாரம்;

தற்போதைய நிலையில், டாடா ஹெக்ஸா எம்பிவி தொடர்பான மீடியா நடவடிக்கைகள் மற்றும் புரோமோஷன் நடவடிக்கைகள் முழு வீச்சில் துவங்கி நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப தகவல்கள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதுவரை தங்களின் டாடா ஹெக்ஸா எம்பிவி தொடர்பாக எந்த விதமான தொழில்நுட்ப விவரங்களையும் முறைப்படி வெளியிடவில்லை.

கூடுதல் தகவல்களை பெற...

எனினும், டாடா ஹெக்ஸா எம்பிவி தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள,
http://hexa.tatamotors.com/

என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது, 8306688282 என்ற எண்ணுக்கு மிஸ்ட் அழைப்பு (கால்) கொடுத்தால், கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளலாம்.

இஞ்ஜின்;

டாடா ஹெக்ஸா எம்பிவிக்கு, 2.2 லிட்டர் வேரிகார் டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும். இந்த இஞ்ஜின், 154 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

டாடா ஹெக்ஸா எம்பிவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

வருங்கால திட்டங்கள்;

டாடா ஹெக்ஸா எம்பிவி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 4x4 தேர்வையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆரியா மாடலுடனான ஒற்றுமைகள்;

டாடா ஹெக்ஸா எம்பிவி, ஆரியா மாடலின் சேஸியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாடல்களுக்கும் மத்தியில் ஒரே இஞ்ஜின் தான் பகிரப்பட்டுள்ளது. எனினும், டாடா ஹெக்ஸா எம்பிவியின் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

போட்டி;

டிசைன் படி, டாடா ஹெக்ஸா எம்பிவி, ரெனோ லாட்ஜி மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா ஆகிய மாடல்களுக்கு கடுமையான போட்டியாக விளங்குகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Tata Motors has launched their official microsite for all-new Hexa MPV. Bookings for Tata Hexa will be accepted pan India from November 1, 2016, onwards. To know more details about Hexa, interested individuals can pass on their details by clicking the link http://hexa.tatamotors.com/. Second option is to give missed call on to 8306688282. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos