ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே ஆர்டரில் 30 கார்கள் டெலிவிரி!

Written By:

உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் கனவு பிராண்டாக ரோல்ஸ்ராய்ஸ் விளங்குகிறது. நெடிய பாரம்பரியம் மிக்க இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு காரையும் தயாரித்து வழங்குகிறது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 30 கார்களுக்கு சீனாவின் சிறந்த அந்தஸ்து பகுதியாக உள்ள மக்காவ் நகரை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபர் ஸ்டீபன் ஹங் ஆர்டர் செய்திருந்தார்.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 30 கார்களுக்கு சீனாவின் சிறப்பு அந்தஸ்து பகுதியாக உள்ள மக்காவ் நகரை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபர் ஸ்டீபன் ஹங் ஆர்டர் செய்திருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான ஒப்பந்தம் லண்டனிலுள்ள ரோல்ஸ்ராய்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இந்தநிலையில், ஏற்கனவே சொன்னது போன்று சரியான நேரத்தில் அந்த 30 ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்களும் இப்போது டெலிவிரி கொடுக்கப்பட்டு விட்டன. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சீனாவின் சிறப்பு நிர்வாக அந்தஸ்தில் உள்ள மக்காவ் பகுதியை சேர்ந்த லூயிஸ் XIII என்ற பிரபல நட்சத்திர ஓட்டலின் அதிபர் ஸ்டீபன் ஹங் இந்த ஆர்டரை கொடுத்தார். மேலும், அந்த ஓட்டலின் சிவப்பு வண்ணத்திற்கு ஏற்ப கார்களும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.

30 கார்களில் 28 கார்கள் தூய தங்கபொருட்கள் கலக்கப்பட்ட ஸ்டீபன் ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும் 2 கார்கள் தங்க வண்ணத்திலும் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. தங்க வண்ணக் கார்கள் குறிப்பிட்ட விவிஐபி வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்த 30 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், லூயிஸ் XIII நட்சத்திர ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சேவையில் பயன்படுத்தப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு புது விதமான கவுரவத்தையும், அனுபவத்தையும் வழங்கும் என ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

30 கார்களும் லூயிஸ் ஓட்டல் நிர்வாகத்தின் விருப்பங்களின் அடிப்படையில் பிரத்யேக மாடல்களாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறம் மற்றும் உள் வடிவமைப்பில் பல பிரத்யேக வேலைப்பாடுகளுடன் அலங்கரித்துடெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கார்களுக்கான ஆர்டர் மதிப்பு ரூ.122 கோடி என தெரிவிக்கப்படுகிறது. இந்த கார்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சியை ரோல்ஸ்ராய்ஸ் வழங்க உள்ளது. அதேபோன்று, இந்த கார்களை நிறுத்துவதற்காக பிரத்யேக வளாகத்தை ஓட்டலில் அமைக்க லூயிஸ் ஓட்டல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சரி, 30 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்போகும் லூயிஸ் 13 நட்சத்திர ஓட்டல் எப்படியிருக்கும். இந்த இரண்டு படங்கள் மூலமாக உங்களுக்கு ஐடியா வந்துடும். இது ஓட்டலின் வெளிப்பக்கம்.

ஏதோ அரண்மனையை பார்ப்பது போன்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதுதானே. இதுதான் அந்த ஓட்டலின் விருந்தினர்களுக்கான சொகுசு அறை. 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Largest Rolls-Royce Order Ever Made Has Finally Been Delivered. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos