விற்பனையில் டாப் 10 கார்கள்... 7 இடங்களை கைப்பற்றிய மாருதி கார் மாடல்கள்!

By Saravana Rajan

பண்டிகை காலத்துக்கு துவக்கமாக அமைந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது. மேலும், புதிய மாடல்களின் வரவு இந்த கார் விற்பனைக்கு உத்வேகத்தை கொடுத்தது. பல கார் நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்தன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியின் தயாரிப்புகள் தொடர்ந்து இந்த பட்டியலில் அசத்தி வருகின்றன. மேலும், பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ரெனோ க்விட் கார் புதிய விற்பனை மைல்கல்லை தொட்டு சாதித்தது. கடந்த மாதத்தில் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 10. மாருதி சியாஸ்

10. மாருதி சியாஸ்

மிட்சைஸ் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி காரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து முதலிடத்தை பெற்றது மாருதி சியாஸ் கார். மேலும், ஒட்டுமொத்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 6,214 சியாஸ் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் கார் வந்த பிறகு, விற்பனையில் ஹோண்டா சிட்டியை வீழ்த்தி முன்னேறியிருக்கிறது சியாஸ். இந்த நிலையை தொடர்ந்து, விற்பனையில் நம்பர்-1 மாடல் என்ற பட்டத்தை தட்டிச் செல்லுமா சியாஸ் வரும் மாத விற்பனை பட்டியலை வைத்து முடிவு செய்யலாம்.

09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

கடந்த மாதத்தில் மாருதி செலிரியோ கார் 9வது இடத்தை பிடித்தது. ஆகஸ்ட்டில் 8,063 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அடக்கமான வடிவம், போதிய சிறப்பு அம்சங்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி, அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் என என பட்ஜெட் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறது.

08. மாருதி பலேனோ

08. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் 8வது இடத்தை மாருதி பலேனோ பிடித்துள்ளது. ஆகஸ்ட்டில் 8,671 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோற்றம், இடவசதி, சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க காராக இருப்பதே பலேனோவின் வெற்றிக்கான காரணங்கள்.

 07. ஹூண்டாய் எலைட் ஐ20

07. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதத்தில் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரகத்தில், நேர் போட்டியாளரான மாருதி பலேனோ காரை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வென்றுவிட்டது. கடந்த மாதத்தில் 9,146 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இது ஹூண்டாய் நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாகவே இருக்கிறது. ஏனெனில், அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, கடும் போட்டிகளை எதிர்கொண்டு சிறப்பான விற்பனை பங்களிப்பை எலைட் ஐ20 கார் வழங்கி வருகிறது.

06. ரெனோ க்விட்

06. ரெனோ க்விட்

கடந்த மாதம் ரெனோ க்விட் கார் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. ஆம், ஆகஸ்ட்டில் ரெனோ க்விட் காரின் விற்பனை 10,000 என்ற புதிய எண்ணிக்கை மைல்கல்லை கடந்தது. கடந்த ஒரே மாதத்தில் 10,719 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது போட்டியாளர்களுக்கு சற்று அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் செய்தியாகவே அமையும். மேலும், ரெனோ நிறுவனம் சொன்னது போலவே, க்விட் காரின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதும், இந்த விற்பனை எண்ணிக்கை மூலமாக தெரிய வருகிறது. எனவே, முன்பதிவு செய்தவர்கள், எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே காரை டெலிவிரி எடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

 05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஏமாற்றம் தராமல், மாதாமாதம் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் மாடல். கடந் மாதத்தில் 12,957 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்ட்டில் பிரிமியம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் 4வது இடத்தை ஸ்விஃப்ட் பிடித்தது. கடந்த மாதத்தில் 13,027 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. போரடிக்காத இதன் டிசைன் மூலமாக, ஹேட்ச்பேக் காரின் சூப்பர் ஸ்டார் மாடலாக தொடர்ந்து வலம் வருகிறது. மைலேஜ், விலை, பராமரிப்பு செலவு என அனைத்திலும் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 14,571 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான விலையில் மிகவும் நம்பகமான மாடல். குறைந்த பராமரிப்பு செலவு, சிறிய இடத்திலேயே பார்க்கிங் செய்யும் வசதி, அதிக ஹெட்ரூம் இடவசதி போன்றவை இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயங்கள்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதத்தில் 15,766 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை சற்று குறைவுதான் என்றாலும், இன்னமும் போட்டியாளர்கள் எட்ட முடியாத இடத்தில் மாருதி டிசையர் கார்கள் இருக்கிறது. குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பது இதன் முக்கிய அம்சம்.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

க்விட் போன்று இன்னும் எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் சந்திக்க தயார் என்று சவால் விட்டு நிற்கிறது மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை எண்ணிக்கை. ஆம், க்விட் விஸ்வரூபத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் இருக்கிறது மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை. கடந்த மாதத்தில் 20,919 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைந்த பராமரிப்பு செலவு, மாருதியின் சர்வீஸ் மையங்களின் விரிவான சேவை போன்றவை இந்த காருக்கு பக்க பலமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Top 10 Best selling cars in August 2016.
Story first published: Tuesday, September 6, 2016, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X