பழைய கார் மார்க்கெட்டில் அனைத்திலும் சிறப்பான மதிப்புமிக்க டாப் 10 கார்கள்!

குறைவான பட்ஜெட்டில் நல்ல கண்டிஷனில் உள்ள கார்களை பழைய கார் மார்க்கெட்டில் எளிதாக வாங்க முடியும். அதில், அதிக மதிப்புமிக்க டாப் 10 கார்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

By Saravana Rajan

முன்பெல்லாம் புதிய கார் வாங்குவோர் குறைந்தது 7 முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால், இப்போது இந்தியர்களின் பொருளாதார நிலை மேம்பட்டிருப்பதால், சில ஆண்டுகளுக்கு ஒரு புதிய கார் வாங்கும் போக்கு காணப்படுகிறது. இதனால், பழைய கார் மார்க்கெட்டில் நல்ல கண்டிஷனில் உள்ள கார்கள் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இது பல இந்தியர்களின் கார் வாங்கும் கனவை சீக்கிரமாகவே நனவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபோன்று பழைய கார்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஏதுவாக, பழைய மார்க்கெட்டில் அதிக டிமான்ட் இருக்கும் சிறந்த 10 கார்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 01. மாருதி வேகன் ஆர்

01. மாருதி வேகன் ஆர்

பட்ஜெட் கார்களில் அதிக ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதி கொண்ட மாடல் என்பதால் மாருதி வேகன் ஆர் காருக்கு புதிய மார்க்கெட்டில் மட்டுமில்லாமல், பழைய மார்க்கெட்டிலும் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. குறைவான பட்ஜெட் கொண்டவர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். 5 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரம் ஓடிய கார்கள் ரூ.2 லட்சத்திற்குள் வாங்கலாம். நல்ல கண்டிஷனில் உள்ள 4 ஆண்டுகள் ஓடிய மாடலை ரூ.2.5 லட்சத்தில் வாங்கி விட முடியும். பராமரிப்பு செலவும் குறைவான கார்.

02. ஹூண்டாய் ஐ10

02. ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10 காருக்கு பழைய மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல டிமான்ட் இருக்கிறது. ரூ.2.5 லட்சத்தில் சிறப்பான கண்டிஷனில் உள்ள ஐ10 காரை வாங்கிவிட முடியும். புதிய மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனையில் இருப்பதும், இந்த காருக்கான பலம்.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

யூஸ்டு மார்க்கெட்டில் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு எப்போதுமே கிராக்கி அதிகம். அசத்தும் டிசைன், நம்பகத்தன்மை, விலை ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு தோதாக இருக்கின்றது. பழைய தலைமுறை மாடல் ரூ.2.5 லட்சம் விலையிலும், புதிய தலைமுறை மாடல்கள் ரூ.3.5 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களுக்கு டிமான்ட் உள்ளது.

04. ஹூண்டாய் ஐ20

04. ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காரின் பிரிமியம் விஷயங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிற மாடல்களைவிட அந்தஸ்தை கூட்டும் அம்சங்கள் இருப்பதாக வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது. பழைய தலைமுறை மாடல்கள்தான் அதிகம் வருகிறது. 4 முதல் 5 ஆண்டுகள் பழமையான ரூ.3 லட்சம் பட்ஜெட்டில் இருந்து பார்க்கலாம்.

05. மாருதி டிசையர்

05. மாருதி டிசையர்

குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் டைப் கார். எனவே, மாருதி டிசையருக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. பழைய தலைமுறை மாடலில் பூட் ஸ்பேஸ் அதிகம் என்பதால், அந்த காருக்கும் டிமான்ட் உண்டு. ரூ.4 லட்சத்தில் சில ஆண்டுகளே ஆன நல்ல கண்டிஷனில் உள்ள காரை வாங்கிவிடும் வாய்ப்புள்ளது.

06. ஹோண்டா சிட்டி

06. ஹோண்டா சிட்டி

இந்த பெயரை கேட்டாலே பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு விடும். அந்தளவு வாடிக்கையாளர் மனதில் இடம்பிடித்துவிட்ட மாடல். டிசைன், இடவசதி, தரம், வசதிகள் என அனைத்திலும் நிறைவான மாடல். 2005ம் ஆண்டு மாடல் ரூ.2 லட்சத்திலும், 2009ம் ஆண்டில் வந்த மாடல் ரூ.3.5 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. அதற்கு பின் வந்த மாடல்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் கண்டிஷனை பொறுத்து வாங்க முடியும்.

07. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

07. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

மிடுக்கான தோற்றம், வசதிகள், விலை என அனைத்திலும் கவரும் எஸ்யூவி மாடல். 2013ம் வருஷத்திய பெட்ரோல் மாடல் ரூ.5 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ரூ.6 லட்சத்திலிருந்தும் கிடைக்கிறது.

08. மாருதி எர்டிகா

08. மாருதி எர்டிகா

சரியான விலையில் நம்பகமான 7 சீட்டர் மாடலாக மாருதி எர்டிகா மாறியிருக்கிறது. வாடிக்கையாளரின் முதன்மையான தேர்வுமாக இருக்கிறது. தற்போது யூஸ்டு மார்க்கெட்டிலும் மாருதி எர்டிகாவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. நல்ல கண்டிஷனில் உள்ள மாடல்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் வாங்க முடியும். சில ஆண்டுகள் மட்டுமே ஓடிய கார்களையும் தோதான விலையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

09. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

09. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கும் பழைய மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் உள்ளது. கம்பீரமான தோற்றம், இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்ற அம்சங்கள், இடவசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது. மேலும், 7 பேர் செல்வதற்கான இடவசதியும், அதிக எரிபொருள் சிக்கனம் தரும் டீசல் எஞ்சினும் இதற்கு வலு சேர்க்கின்றன. நல்ல கண்டிஷனில் உள்ள கார் ரூ.5 லட்சத்தில் கிடைக்கிறது.

10. டொயோட்டா இன்னோவா

10. டொயோட்டா இன்னோவா

பழைய தலைமுறை மாடல், புதிய தலைமுறை மாடல் என்றெல்லாம் இல்லை. எல்லா தலைமுறை இன்னோவா கார்களுக்கும் எப்போதுமே டிமான்ட் அதிகம். கண்ணை மூடிக்கொண்டு வாங்க கூடிய மாடல். இடவசதி, நம்பகத்தன்மையில் சிறப்பான மாடல். ஒரு லட்சம் கிமீ ஓடிய காராக இருந்தாலும், விலை சற்று கணிசமாகவே இருக்கும். அந்தளவுக்கு மதிப்புடைய மாடல்.

பழைய கார் மார்க்கெட்டில் அதிக கிராக்கி கொண்ட டாப் 10 கார்கள்!

பழைய கார் வாங்கும்போது, காரின் கண்டிஷன், எவ்வளவு கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளது, உரிமையாளர்களின் எண்ணிக்கை, அதில் இருக்கும் வசதிகள், வேரியண்ட் ஆகியவற்றை பொறுத்து விலை மதிப்பிட வேண்டும். எனவே, பழைய கார் வாங்கும்போது அனுபவமிக்க நண்பர்கள் அல்லது மெக்கானிக்குகளை உடன் அழைத்துச் சென்று ஆய்வு செய்து வாங்கவும். அவசரப்படாதீர்கள்.

பழைய கார் மார்க்கெட்டில் அதிக கிராக்கி கொண்ட டாப் 10 கார்கள்!

மேலும், உற்பத்தி நிறுத்தப்பட்ட கார்கள், குறைவான சர்வீஸ் மையங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு உடைய கார்களை குறைவான விலையில் கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தொடர்புடைய செய்திகள்
  • யூஸ்டு கார் வாங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
  • யூஸ்டு மாருதி வேகன் ஆர் காரின் சாதக, பாதகங்கள்!
Most Read Articles
English summary
Top 10 Most Popular Used Cars In India. Read in Tamil.
Story first published: Friday, October 21, 2016, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X