இந்த ஆண்டில் அறிமுகமான உலகின் சக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட உலகின் அதிசக்திவாய்ந்த டாப் 10 தயாரிப்பு நிலை கார்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என்பதெல்லாம் கார்களில் முக்கியமான அம்சங்களாக இருந்தாலும், அதிசக்திவாய்ந்த எஞ்சின்களை தயாரிப்பதே ஒவ்வொரு கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனவே, அதிசக்திவாய்ந்த கார்களை உருவாக்குவதில் உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் எப்போதுமே முனைப்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டில் மார்க்கெட்டிற்கு வந்த தயாரிப்பு நிலை கார்களில் உலகின் அதிசக்திவாய்ந்த டாப்- 10 கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

 10. மெக்லாரன் 688 எச்எஸ்

10. மெக்லாரன் 688 எச்எஸ்

மெக்லாரன் 675எல்டி சூப்பர் சீரிஸ் கூபே காரின் அடிச்சட்டத்தை பயன்படுத்தி, அதனைவிட மிக சக்திவாய்ந்த மாடலாக இந்த கார் உருவாக்கப்பட்டது. மொத்தமாகவே 25 கார்கள் மட்டுமே விற்பனைக்கு செல்லும் என்று மெக்லாரன் அறிவித்தது. இலகு எடை கலப்பு உலோகங்கள் கட்டமைப்பு கொண்ட இந்த கார் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 679 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 334 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 09. ஃபெராரி ஜிடிசி4 லஸ்ஸோ

09. ஃபெராரி ஜிடிசி4 லஸ்ஸோ

ஃபெராரி நிறுவனத்தின் மிகவும் ஸ்டைலான மாடல்களில் ஒன்று. கிராண்ட் டூரர் வகையை சேர்ந்த இந்த காரில் 4 பேர் பயணிக்க முடியும். ஃபெராரி எஃப்எஃப் காரின் வழித்தோன்றலாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 681 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் மணிக்கு 329 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

08. லம்போர்கினி அவென்டேடார் எஸ்

08. லம்போர்கினி அவென்டேடார் எஸ்

உலக அளவில் கார் பிரியர்களின் கனவு கார் மாடல் லம்போர்கினி அவென்டேடார். இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை சேர்த்து புதிய மாடலாக வெளிவந்துள்ளது அவென்டேடார் எஸ். இந்த காரின் சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 730 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சாதாரண அவென்டேடார் காரைவிட 40 பிஎச்பி கூடுதல் பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும்.

07. லம்போர்கினி சென்டினாரியோ ரோட்ஸ்டெர்

07. லம்போர்கினி சென்டினாரியோ ரோட்ஸ்டெர்

இதுவரை வந்த லம்போர்கினி சூப்பர் கார்களில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் இதுதான். லம்போர்கினி நிறுவனர் பெருஷியோ லம்போர்கினியின் 100வது பிறந்த தினத்தையொட்டி வெளியிடப்பட்ட மாடல் சிறப்பு வாய்ந்த மாடல். லம்போர்கினி சென்டினாரியோ எடிசனில் மொத்தம் 40 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், 20 கார்கள் திறந்து மூடும் கூரை அமைப்பு கொண்டதாக இருக்கும்.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 759 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 349 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 2.3 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

06. டெஸ்லா மாடல் எஸ் எஸ் பி100டி

06. டெஸ்லா மாடல் எஸ் எஸ் பி100டி

அதிசக்திவாய்ந்த கார்கள் என்றாலே பெட்ரோல் எஞ்சின்தான் ஓன்ற அகராதியை மாற்றி எழுதிய மின்சார கார் மாடல் இது. மேலும், உலகின் மிக விரைவான ஆக்சிலரேசன் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் மின்சார மோட்டார்கள் அதிகபட்சமாக 762 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த காரை பின்பற்றி தற்போது பல சக்திவாய்ந்த மின்சார கார்களை தயாரிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

05. பகானி ஹூவைரா பிசி

05. பகானி ஹூவைரா பிசி

வழக்கம்போல் வித்தியாசமான தோற்றத்தால் வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் கவர்ந்த பகானி மாடல். மிக இலகுவான, வலுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கியர்பாக்ஸ் இல்லாமல் எஞ்சின் சக்தி நேராக சக்கரங்களுக்கு செலுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பத்தில் வந்துள்ளது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 789 பிஎச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சின் இது. மணிக்கு 354 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

04. லாஃபெராரி அபர்ட்டா

04. லாஃபெராரி அபர்ட்டா

லாஃபெராரி காரின் திறந்து மூடும் கூரை கொண்ட மாடல்தான் அபர்ட்டா. கோடீஸ்வரர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இலக்காகி இருக்கும் இந்த காரின் டெலிவிரி சமீபத்தில் துவங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் பிரபல சமையல் நிபுணரும், டிவி பிரபலமாகவும் வலம் வரும் கார்டன் ராம்சேவுக்கு முதல் லாஃபெராரி அபர்ட்டா டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 950 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் மணிக்கு 349 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கார் 1.7 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

03. ரிமாக் கான்செப்ட் எஸ்

03. ரிமாக் கான்செப்ட் எஸ்

டெஸ்லா மாடல் எஸ் போன்றே முழுவதும் மின்சார மோட்டார்களில் இருக்கும் கார் மாடல் இது. மிக ஸ்டைலான சக்திவாய்ந்த இந்த மின்சார கார் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பைக்ஸ் பீக்ஸ் மலையேற்ற போட்டியில் தனது திறனை காட்டி அசத்தியது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் 82kW திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 1,384 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 365 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 1 மில்லின் டாலர்கள் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

02. கோனிக்செக் ரெகேரா

02. கோனிக்செக் ரெகேரா

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கோனிக்செக் நிறுவனத்தின் மிக சக்திவாய்ந்த தயாரிப்பு. இந்த கார் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் ரகத்தை சேர்ந்தது. மொத்தமாக 80 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இதில், 40 கார்கள் ஏற்கனவே விற்பனையாகி விட்டன.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் டர்போ வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1,100 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மேலும், இதில் இருக்கும் மூன்று மின் மோட்டார்கள் இணைந்து 697 பிஎச்பி பவரை அளிக்க வல்லவையாக இருக்கின்றன. ஹைபிரிட் மோடில் வைக்கும்போது அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. மணிக்கு 402 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

01. புகாட்டி சிரோன்

01. புகாட்டி சிரோன்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி நிறுவனம் உலகின் அதிசக்திவாய்ந்த தயாரிப்பு நிலை கார்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையி்ல், அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான புகாட்டி வேரான் கார் மாடலின் வழித்தோன்றலாக சிரோன் என்ற புதிய தலைமுறை காரை வெளியிட்டது.

உலகின் அதிசக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்!!

மொத்தம் 500 கார்கள் உற்பத்தி இலக்குடன் உலகின் அதிசக்திவாய்ந்த கார் மாடலாக இப்போது மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 420 கிமீ வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2.6 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 Most Powerful Cars of 2016
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X