இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 6 எஸ்யூவி மாடல்கள்!

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் 6 சிறந்த எஸ்யூவி மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

By Saravana Rajan

எஸ்யூவி மாடல்கள்தான் இந்தியர்களின் இப்போதைய ஃபேவரிட் ரகமாக மாறியிருக்கிறது. இதனால், புதிய எஸ்யூவி மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன.

புத்தம் புதிய மாடல்கள் தவிர்த்து, கடும் சந்தைப் போட்டி காரணமாக பல எஸ்யூவி மாடல்கள் புதிய தலைமுறை அம்சங்களுடன் வெளியிடப்பட்டன. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் 6 சிறந்த மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிகச்சிறப்பான மாடலாக கூறலாம். வடிவமைப்பு, வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக வந்த ஃபோர்டு எண்டெவர் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. மேலும், இதன் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 ஆக வலம் வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியையே விற்பனையில் விஞ்ச முயன்றது.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் மிக கம்பீரமான தோற்றம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. மேலும், இந்த எஸ்யூவி 158 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 197 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்ததும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஆஃப்ரோடு சவால்களுக்கு ஏற்ற தகவமைப்புகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத இந்த எஸ்யூவி ஆஸ்திரேலிய என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. ரூ.23.51 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது புதிய ஹூண்டாய் டூஸான். எப்போதுமே ஹூண்டாய் நிறுவனத்தின் டிசைன் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த எஸ்யூவியும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது டொயோட்டா ஃபார்ச்சூனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியால் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனை உணர்ந்து கொண்டு டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்தது போலவே சிறப்பான முன்பதிவுடன் இந்த கார் விற்பனையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 164 குதிரைசக்தி திறனை அளிக்க வல்ல 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 177 குதிரைசக்தி திறனை வழங்க வல்ல 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. ரூ.25.92 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா

மாருதி பிரெஸ்ஸா

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் விற்பனையில் கலக்கி வரும் மாடல் மாருதி பிரெஸ்ஸா. இதுவரை 1.72 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன், 83,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி என்பது இதற்கு மிகப்பெரிய பலம்.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்பது வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயங்களில் ஒன்று. இதன் ஏஎம்டி மாடலும் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

சொகுசு மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து பல புதிய மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்கி வருகிறது. அந்தவகையில், சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் நடுத்தர வகை மாடலாக புதிய ஜிஎல்சி எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு தேவையான மாடலாகவே கூறலாம்.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவி ஜிஎல்சி 220 டீ 4MATIC ஸ்டைல், ஜிஎல்சி 220 டீ 4MATIC ஸ்போர்ட் மற்றும் ஜிஎல்சி 300 4MATIC ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் இருக்கும் 2,143சிசி டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0-100 கிமீ வேகத்தை 8.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 210 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டது. ரூ.47.90 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

 ஹோண்டா பிஆர்வி

ஹோண்டா பிஆர்வி

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யூவி மாடல்களில் காம்பேக்ட் ரகத்தில் வந்த ஹோண்டா பிஆர்வி சிறந்த அம்சங்களை பெற்றிருக்கிறது. முன்னணி காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டுள்ள நிலையில், இந்த எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வந்தது. இது பல வாடிக்கையாளர்களுக்கு சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் 7 சீட்டர் மாடல் என்ற தேர்வாக அமைந்தது.

இந்த ஆண்டில் அறிமுகமான அட்டகாசமான டாப் - 5 எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும் அளிக்க வல்லதாக இருக்கின்றன. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள், சிறப்பான தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ரூ.9.05 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Top 6 SUV Models Launched in India 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X