புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

Written By:

வடிவமைப்பில் மாறுதல்கள், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியர்களின் மனம் கவர்ந்த இந்த பிரிமியம் எஸ்யூவி மாடல் எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி புதிய டிஎன்ஜிஏ என்ற டொயோட்டா நிறுவனத்தின் புதிய கட்டமைப்பு தாத்பரியத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், எடை குறைந்திருப்பதுடன், அதிக வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் 4,795மிமீ நீளமும், 1,855மிமீ அகலமும், 1,835மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,750மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகப்பு டிசைன் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்திருக்கிறது. முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் முன்புற க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர், பெரிய க்ரோம் பட்டைக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் பனி விளக்குகள் என முகப்பு அமைப்பு முற்றிலும் மாறியிருக்கிறது.

பக்கவாட்டில் பாடி ஷோல்டர் லைன் மிகவும் கம்பீரமாக மாற்றப்பட்டிருக்கிறது. டி பில்லரின் டிசைன் அமைப்பும் பழைய ஃபார்ச்சூனர் எஸ்யூவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அலாய் வீல்கள், பக்கவாட்டு பகுதி வரை நீளும் டெயில் லைட்டுகளும் பக்கவாட்டு டிசைனை பந்தாவாக காட்டுகின்றன.

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகளும், க்ரோம் பட்டையும் கவர்ச்சியாக இருக்கின்றன. மேலும், பின்புற டெயில் கேட் தானியங்கி முறையில் திறந்து மூடும் வசதி கொண்டது.

இன்டீரியர் மிகவும் பிரிமியமாக மாறியிருக்கிறது. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி என தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியிருக்கின்றன. ரியர் ஏசி வென்ட்டும் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 360என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அதேபோன்று, புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கிளேசியர் ஒயிட், சில்வர் ஸ்கை, எக்லிப்ஸ் பிளாக், கிறிஸ்டல் பியர்ல், கிராஃபைட், ஃபான்டம் பிரவுன் மற்றும் நெபுலா புளூ ஆகிய 7 விதமான வண்ணங்களில் வந்துள்ளது.

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ட்ரெயிலர் ஸ்வே கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.25.92 லட்சம் முதல் ரூ.27.61 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.27.52 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The all-new Toyota Fortuner features a bold new design language along with two new engine options.
Please Wait while comments are loading...

Latest Photos