புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடான் 2017-ல் அறிமுகம்

By Ravichandran

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், 2017-ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், தங்களின் தரமான தயாரிப்புகளால் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது, தங்களின் அடுத்த தயாரிப்பான பிரையஸ் ஹைப்ரிட் மாடலை தயார் செய்து வருகிறது.

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், இந்திய வாகன சந்தைகளில் 2017-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது. டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடல், இந்திய வாகன சந்தைகளில் கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது.

ஊக்கத்தொகை;

ஊக்கத்தொகை;

மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு, இந்திய அரசு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. இதனால், டொயோட்டா நிறுவனம், கூடுதல் விலை உயர்ந்த தயாரிப்புகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், முற்றிலுமாக மறுவடிவமைக்கைப்பட்டுள்ளது. மேலும், இந்த செடானில், இஞ்ஜின் தொடர்பான புரட்சிகரமான தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

பேட்டரி தேர்வுகள்;

பேட்டரி தேர்வுகள்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடான், நிக்கல்-மெட்டல் பேட்டரி மற்றும் லித்தியம்-இயான் பேட்டரி ஆகிய தேர்வுகளுடன் கிடைக்கிறது. எனினும், இந்திய சந்தைகளுக்கு, நிக்கல்-மெட்டல் பேட்டரி பொறுத்தப்பட்ட வேரியன்ட் தான் வழங்கப்படும்.

இஞ்ஜின், மோட்டார்;

இஞ்ஜின், மோட்டார்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடானில், 97 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 71 பிஹெச்பியை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்படும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடானின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மைலேஜ்;

மைலேஜ்;

இந்த பெட்ரோல்-ஹைப்ரிட் செடானான புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட், ஒரு லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளது.

ஃபிளாட்பாரம்;

ஃபிளாட்பாரம்;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடான் தான் டொயோட்டாவின் டிஎன்ஜிஏ அல்லது டொயோட்டா நியூ குளோபல் ஆர்கிடெக்சர் பிளாட்ஃபாரம் எனப்படும் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பை விட, எளிமையாக இயக்கும் வகையில், இதில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடான், இந்தியாவில் பட்டையை கிளப்பும் வகையில் விற்பனையாகும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. எனினும், அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மற்றும் லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்ட இந்த புதிய டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் செடானின் சிறப்பம்சங்களை இந்திய வாகன சந்தைகளில் எடுத்துக்காட்ட டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

சென்னை- பெங்களூர் இடையே செமி புல்லட் ரயில்... ஆவ்வ்வ்... தூக்கம் வருதே... !!

லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய இந்தியாவின் முதல் பெண்!

திமுக தலைவர் கருணாநிதி பயணித்த சலூன் கார் சொகுசு ரயில் பெட்டி: சுவாரஸ்யங்கள்

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota's new Prius Hybrid Sedan is expected to be launched in early 2017 in India. New Prius has been completely redesigned compared to its outgoing model. Petrol-hybrid sedan is said to deliver a mileage of 40km/l which will make it most fuel efficient car in India. New Prius is first car to be built on Toyota's TNGA (Toyota New Global Architecture) platform. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X