பல நாட்களுக்கு முன்னரே டாக்சியை முன்பதிவு செய்யும் வசதி: உபேர் அறிமுகம்!

Written By:

உபேர் இந்தியா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள்களுக்கு டாக்சியை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளனர். டாக்சி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. டாக்சிகளின் சேவைகள் இந்தியாவில் நாளுக்குநாள் மேம்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களால் இயன்ற வரை புதிய வசதிகளை அறிமுக செய்து கொண்டே இருக்கின்றனர்.

பல நாட்களுக்கு முன்னரே டாக்சியை முன்பதிவு செய்யும் வசதி கொண்டுள்ள உபேர் ஆப் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

முன்பதிவு;

உபேர் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பயணத்திற்கான டாக்சி சேவைகளை மேலும் மேம்படுத்தப்பட்ட முறையில் வழங்குகின்றனர். இனிமேல், வாடிக்கையாளர்கள், தங்களின் பயணத்திற்கான டாக்சிகளை 30 நிமிடங்கள் முதல் 30 நாட்கள் காலகட்டம் வரை எப்போது வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம். இதற்காக, உபேர் நிறுவனம் எந்த விதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.

முக்கிய பயனர்கள்;

இத்தகைய முன்பதிவு, உபேர் ஆப் அல்லது உபேர் அப்ளிகேஷன் என்று அழைக்கப்படும் தடம் மூலம் சாத்தியமாகிறது. இது விமான நிலையங்களுக்கு டிராப்-ஆஃப் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

முன்பதிவு செய்யும் முறை;

உபேர் ஆப்பில், தங்கள் பயணத்தை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக தங்கள் பயணத்தை புக் செய்யலாம். இதற்கு வாடிக்கையாளர்கள், பிக்கப் லொகேஷன் எனப்படும் பயணத்தின் ஆரம்ப இடத்தையும், நேரத்தையும், பைனல் தேச்டிநேஷன் எனப்படும் சென்று அடைய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து புக்கிங் செய்து கொள்ளலாம்.

சர்ஜ் பிரைசிங்;

உபேர் ஆப்பில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் முறை, உபேர் எக்ஸ் ரைட்-டில் உள்ளது போன்றே இருக்கும். உபேர் ஆப்பில் செய்யும் முன்பதிவுகள், சர்ஜ் பிரைசிங் எனப்படும் விலை கூட்டப்பட்ட முறையின் அடிப்படையில் இயங்கும். உபேர் ஆப்பில், இந்த சர்ஜ் பிரைசிங் முறையானது, ஒரு சில குறிப்பிட்ட மையங்களுக்கு அதிக அளவிலான டிரைவர்கள் அதிக அளவில் ஈர்த்து பயணங்களை மேற்கொள்ள வைப்பதற்காக பின்பற்றப்படுகிறது என உபேர் இந்தியா தெரிவிக்கிறது.

ரத்து செய்யும் முறை;

இந்த உபேர் ஆப்பில், பயணங்களை ரத்து செய்யும் முறையானது ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும். பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு 5 நிமிடங்களுக்கு உள்ளாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டால் எந்த விதமான கேன்செல்லேஷன் ஃபீ எனப்படும் ரத்து செய்யும் கட்டணம் வசூலிக்கப்படாது. 5 நிமிடத்திற்கு பின் வாடிக்கையாளர்கள், தங்கள் பயணத்தை ரத்து செய்தால், உபேர் இந்தியா நிறுவனத்தின் கொள்கைகள் படி ரத்து செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

கிடைக்கும் நகரங்கள்;

தற்போதைய நிலையில், உபேர் இந்தியா நிறுவனம், பயணத்தின் பல நாட்களுக்கு முன்னரே டாக்சியை முன்பதிவு செய்யும் வசதியை இந்தியாவின் 20 நகரங்களில் வழங்கி வருகின்றனர்.

நினைவூட்டும் வசதி;

உபேர் ஆப் பயனர்கள், இந்த உபேர் ஆப்பில் பயணத்திற்கான முன்பதிவு செய்திருந்தால், அந்த பயணத்தின் தினத்திற்கு முன்னதாக அவர்களுக்கு ரிமெயிண்டர் எனப்படும் நினைவூட்டும் முறையும் பின்பற்றப்படுகிறது.

போட்டியாளர்களுடன் ஒப்பீடு;

உபேர் இந்தியா நிறுவனத்தின் மிக முக்கியமான போட்டியாளரான ஓலா நிறுவனம், பல நாட்களுக்கு முன்னரே டாக்சியை முன்பதிவு செய்யும் வசதியை, இந்த சேவை துவங்கிய னால் முதல் வழங்கி வருகின்றனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Uber India has decided to offer customers choices to schedule their rides. No additional price will be applicable on scheduled rides by Uber India. Customers can now schedule their rides between 30 minutes to 30 days for future. This will be helpful for individuals who need to travel to Airport for drop-offs. Scheduled Rides via Uber will be similar to Uber X ride. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos