பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

By Ravichandran

இந்தியாவில் தொடர் பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. இது மக்களுக்கு மட்டும் சந்தோஷமான விஷயம் அல்ல. ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் கொண்டாட்டமான காலம் ஆகும்.

இந்த பண்டிகை கொண்டாட்டங்களை மையப்படுத்தி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களின் 2 வீலர் மற்றும் கார்களை அறிமுகம் செய்வர். இந்த வகையில், இந்த ஆண்டும், பல்வேறு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது போன்ற தருணத்தில் தான், கார் நிறுவனங்கள் பல்வேறு வகையிலான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் கூட வழங்குவர். இவை கார் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 2 தரப்பிரனருக்குமே லாபகரமான விஷயமாக உள்ளது.

இந்த 2016-ஆம் ஆண்டின் பண்டிகை காலங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மாடல்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ க்விட் ஏஎம்டி;

ரெனோ க்விட் ஏஎம்டி;

ரெனோ நிறுவனம், தங்களின் 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலை இந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தான் அறிமுகம் செய்தனர். சிறந்த முறையில் விற்பனையாகும் இந்த ரெனோ க்விட் மாடலின் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய மாடல், இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படலாம்.

ரெனோ க்விட் பெற்று வரும் பிரபலத்தன்மையினால், ஃபிரான்ஸ் நாட்டின் ரெனோ நிறுவனத்தின் விற்பனையிலும் பெரும் அளவில் உதவிகரமானதாக உள்ளது. இந்த ரெனோ க்விட் மாடலில் சேர்க்கப்படும் ஈஸி-ஏஎம்டி எனப்படும் தொழில்நுட்பம், எஃப் டீம் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

ரெனோ க்விட் ஏஎம்டி, முதன் முதலாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. இந்த ஏஎம்டி மாடல், பிரத்யேக டயல் மற்றும் ரோட்டரி கியர் ஷிஃப்ட் கொண்டிருந்தது.

இந்த ரெனோ க்விட் ஏஎம்டி, அநேகமாக 1.0 லிட்டர் எஸ்சிஇ இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 67 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 4 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; அக்டோபர் 2016

டாடா கைட் 5;

டாடா கைட் 5;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் டியாகோ ஹேட்ச்பேக் மூலம் பெற்ற வெற்றியினால் மகிழ்ச்சியில் உள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 40,000 டியாகோ கார்கள் விற்பனையாகியுள்ளது.

டாடா நிறுவனம், தங்களின் டாடா கைட் 5 சப்-காம்பேக்ட் செடானை அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருவதை பார்த்தால், இது இந்த பண்டிகை காலங்களின் போது நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கைட் 5 சப்-காம்பேக்ட் செடான், டியாகோ வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரமை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. டியாகோ மாடல் பெற்ற வெற்றியானது, டாடா கைட் 5 மாடலின் அறிமுகத்தின் போது உதவிகரமாக இருக்கும்.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

டாடா கைட் 5, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என இரு விதமான இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது. டாடா கைட் 5 மாடலுக்கான 1.2 லிட்டர் ரெவோட்ரான் இஞ்ஜின், 3-சிலிண்டர்கள உடைய எம்பிஎஃப்ஐ இஞ்ஜினாக இருக்கும். 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இதன் இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டாடா கைட் 5 மாடலுக்கான இஞ்ஜின், 3-சிலிண்டர்கள உடைய 1.05 ரேவோ டார்க் இஞ்ஜினாக இருக்கும். 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இஞ்ஜின், 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 4.5 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; அக்டோபர் 2016

மாருதி சுஸுகி இக்னிஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ், அடிப்படையில் ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் ஆகும். ஆனால், இது எஸ்யூவி தன்மைகளை கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ், பாடி கிளாட்டிங், வில் ஆர்ச் கிளாட்டிங் மற்றும் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையதாக உள்ளது.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

மாருதி சுஸுகி இக்னிஸ், 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ், பிரிமியம் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 4 - 6 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; நவம்பர் 2016

மாருதி பலேனோ ஆர்எஸ்;

மாருதி பலேனோ ஆர்எஸ்;

மாருதி நிறுவனம், தங்களின் பலேனோவின் ஆர்எஸ் வெர்ஷன் அல்லது ரேலி ஸ்போர்ட் வெர்ஷன் என அழைக்கப்படும் மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலை, இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி பலேனோ மாடலானது, பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் சந்தை முன்னோடியாக விளங்குகிறது.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

மாருதி பலேனோ ஆர்எஸ் என்பது பலேனோவின் ஸ்போர்ட்டி வடிவம் ஆகும். மாருதி பலேனோ ஆர்எஸ், முன் பக்கத்திலும், பக்கவாட்டிலும், பின் பகுதியிலும் பாடி கிட பெறுகிறது. மேலும், இதற்கு டியூன் செய்யப்பட்ட இஞ்ஜின் பொருத்தப்படலாம்.

மாருதி நிறுவனம், இந்த மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலுக்கு 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இஞ்ஜின், 111 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 6 - 7 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; நவம்பர் 2016

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்;

ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், முன்னதாக தங்களின் அமியோ சப்-காம்பேக்ட் செடானை பெட்ரோல் வேரியன்ட்டில் அறிமுகம் செய்தனர்.

இதன் டீசல் வேரியன்ட்டை, இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்ய உள்ளனர்.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

ஃபோக்ஸ்வேகன் அமியோ, போலோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2 மாடல்களுக்கும் ஒரே இஞ்ஜின் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் மாடலுக்கு, 1.5 லிட்டர் டிடிஐ இஞ்ஜின் பொருத்தப்படலாம். இந்த இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 6.5 - 8.5 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; அக்டோபர் 2016

டாடா நெக்ஸன்;

டாடா நெக்ஸன்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் கார்களின் வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை பின்பற்ற துவங்கிவிட்டனர். இந்த மாற்றம், டியாகோவின் ஸ்டைல் நிரந்த வடிவமைப்பிலேயே காண முடிந்தது.

டாடா மோட்டார்ஸ், வழக்கமாக தங்களின் எஸ்யூவிகளுக்கும் மிகவும் புகழ் பெற்றுள்ளது. இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகத்தின் மூலம், இழந்த சந்தையினை மீண்டும் கைப்பற்ற நினைக்கின்றனர்.

பண்டிகைகளை ஒட்டி இந்தியாவில் விரைவில் வெளியாகும் கார்கள் - முழு விவரம்

நல்ல விகிதாசாரத்துடன் வடிவமைக்கப்பட்ட டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முன்னதாக, டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது முதலே, இஹ்டு மக்களின் மனதை கொள்ளையடிக்க துவங்கிவிட்டது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 6.5 - 9 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; நவம்பர் 2016

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விமானம் பறக்கும்போது பைலட்டுகள் சந்திக்கும் சவால்களும், மறைக்கும் விஷயங்களும்!

சுற்றுலாத் தலமாக மாறிய உலகின் அபாயகரமான விமான ஓடுபாதை... !!

அமெரிக்க அதிபருக்கான புதிய விமானத்தை தயாரிக்கும் போயிங்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Festive period is time, when car manufacturers launch new cars and help customers choose their best cars. During this Period, most car manufacturers provide offers and discounts which benefit both customer and manufacturer. Here is list of most anticipated car launches like that of Renault Kwid AMT, Tata Kite 5 during this festive season. To know more, check here...
Story first published: Wednesday, August 24, 2016, 20:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X