அறிமுகத்திற்கு தயார்: ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் உற்பத்தி துவங்கியது

By Ravichandran

அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே, ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் உற்பத்தியை துவங்கிவிட்டது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், பூனே அருகே உள்ள சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கார் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ கார், மே 25-ஆம் தேதி தயாரிக்கபட்டு வெளியிடப்பட்டது.

ஃப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங்கை அதிகரிக்கும் நோக்கில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் இந்தியா முழுவதும் டூர் செய்து வருகிறது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அமியோ காம்பேக்ட் செடானுக்கு அதிக அளவிலான புக்கிங் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்களை காத்திருக்க விடாமல் நேரத்துடன் கார்களை டெலிவரி செய்யவே இந்த உற்பத்தி நடவடிக்கை துவங்கபட்டுள்ளதாக தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அறிமுகத்திற்கு முன்பாக, பிரத்யேக இன்வென்ட்ரியை வடிவமைத்து வருகிறது. அமியோ காம்பேக்ட் செடானின் உற்பத்திக்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 720 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டே, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கார் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்ட முதல் அமியோ காம்பேக்ட் செடான், 1.2 லிட்டர், எம்பிஐ பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த முதல் அமியோ காம்பேக்ட் செடான், புளூ சில்க் நிறத்தில் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அமியோ காம்பேக்ட் செடான் காரை தேர்வு முறையிலான 1.5 லிட்டர், 4-சிலிண்டர், டிடிஐ டீசல் இஞ்ஜினுடன் வழங்குகின்றனர்.

volkswagen-ameo-compact-sedan-production-begin-prior-to-launch

பாதுகாப்பு பொருத்த வரை, அடிப்படை வேரியன்ட்டில் இருந்தே ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், ட்யூவல் ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் வழங்கபடுகிறது. மேலும், இந்த அமியோ காம்பேக்ட் செடானில், குரூஸ் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஸ்டேடிக் கார்னரிங் லைட்கள் ஆகிய அம்சங்களையும், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இணைத்து வழங்க உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் நிலையில் காம்பேக்ட் செடானில் கடுமையாக போட்டி போட உள்ளது. இந்திய வாகன சந்தைகளில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர், ஹுண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும். ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், நல்ல சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen India commenced Production of Volkswagen Ameo Compact Sedan, prior to its Launch. Volkswagen India rolled out First Ameo from its Chakan facility in Pune. Ameo is currently touring India, to garner more pre-bookings. Volkswagen India is anticipating huge orders. Volkswagen has invested over Rs. 720 crores for Ameo Production. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X