இந்திய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபோக்ஸ்வேகன்!

By Saravana

டீசல் எஞ்சின்களின் மாசு வெளியிடும் அளவில் ஏற்பட்ட பிரச்னைக்காக, இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்கத்திடம் ஃபோக்ஸ்வேகன் மன்னிப்பு கோரியுள்ளது.

டெல்லியில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் காரின் அறிமுக நிகழ்ச்சி சற்றுமுன் நடந்தது. அமியோ என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் காரின் அறிமுக நிகழ்ச்சியில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் போர்டு உறுப்பினர் ஜுர்கென் ஸ்டாக்மேன் கலந்து கொண்டார்.

 இந்திய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபோக்ஸ்வேகன்!

காரை அறிமுகம் செய்வதற்கு மேடைக்கு வந்தவுடனே, டீசல் எஞ்சின்களில் இருக்கும் மாசு வெளியிடும் பிரச்னைக்காக இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர்களிடத்தில் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

சர்வதேச அளவில் இந்தியாவை மிகவும் முக்கிய மார்க்கெட்டாக கருதுகிறோம். எனவேதான், இந்த புதிய காரை இந்தியாவுக்காக, இந்தியாவிலேயே உருவாக்கியிருக்கிறோம். காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டின் மதிப்பை இந்த புதிய அமியோ கார் உயர்த்தும் என்று நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

Most Read Articles
Story first published: Tuesday, February 2, 2016, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X