ஃபோக்ஸ்வேகன் கார்கள் விலையும் உயருகிறது!

Written By:

புத்தாண்டு துவங்க இருக்கும் நிலையில், கார் நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டன.

இந்த நிலையில், அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அனைத்து கார்களின் விலையை 3 சதவீதம் உயர்த்த இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, ஜெட்டா, பீட்டில் உள்ளிட்ட கார் மாடல்களுடன் சமீபத்தில் விற்பனைக்கு வந்த அமியோ கார் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவீனம் வெகுவாக உயர்ந்துள்ளதையடுத்து, இந்த விலை உயர்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ரூ.5.24 லட்சம் முதல் ரூ.27.83 லட்சம் வரையிலான விலையில் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்று சதவீதம் என்பது சற்று கணிசமான விலை உயர்வாகவே இருக்கும்.

வேரியண்ட்டுகளை பொறுத்து விலை உயர்வில் மாறுதல் இருக்கும். இந்த அறிவிப்பானது, புத்தாண்டில் கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Volkswagen India will increase prices of all its models by three percent including the sub-compact sedan Ameo.
Please Wait while comments are loading...

Latest Photos