ஃபோக்ஸ்வேகன் கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

Written By:

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு விசேஷ அலங்கார பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பாரம்பரியத்தையும், காரின் மதிப்பையும் கூட்டும் வகையில் இந்த பேக்கேஜ் அமையும்.

தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஃபோக்ஸ்வேகன் காருடன் இந்த பேக்கேஜை நிச்சயம் தேர்வு செய்வர் என்று நம்பலாம். இந்த விசேஷ பேக்கேஜின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மூன்று கார்கள்

ஃபோக்ஸ்வேகன் அமியோ, போலோ, வென்ட்டோ கார்களுக்கு இந்த விசேஷ அலங்கார பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரெஸ்ட் கலெக்ஷன் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் குறிப்பிடப்படுகிறது.

விசேஷ பேட்ஜ்

க்ரெஸ்ட் கலெக்ஷன் பேக்கேஜில் போலோ, அமியோ, வென்ட்டோ கார்கள் வெள்ளை வண்ணத்தில் மட்டும் கிடைக்கும். கூடுதல் பளபளப்பு கொண்டதாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிறப்பிடமான வோல்ஸ்பெர்க்கையும், அதன் பாரம்பரியத்தையும் கறிப்பிடும் வகையில் விசேஷ கருப்பு வெள்ளை பட்டை ஒன்று பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருக்கும்.

கருப்பு- வெள்ளை

இதுதவிர, இந்த வெள்ளை வண்ண கார்களின் மேற்கூரை கருப்பு வண்ணம் தீட்டப்பட்டதாக கிடைக்கும். உட்புறத்தில் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய பீஜ் வண்ண லெதர் சீட் கவர்கள், முன்புற இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட் வசதி, விசேஷ மிதியடிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வென்ட்டோ காருக்கு கருப்பு வண்ண ஸ்பாய்லர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலை

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் சாதாரண மாடல்களைவிட இந்த க்ரெஸ்ட் கலெக்ஷன் எடிசன் மாடல் ரூ.21,000 முதல் ரூ.25,000 கூடுதல் விலையிலும், போலோ காரின் க்ரெஸ்ட் கலெக்ஷன் ரூ.16,000 கூடுதல் விலையிலும் வந்துள்ளது.

வென்ட்டோ வேரியண்ட்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ஹை லைன் வேரியண்ட்டில் மட்டுமே இந்த க்ரெஸ்ட் கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வென்ட்டோ க்ரெஸ்ட் கலெக்ஷன் ரூ.3,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

 

பெருமைக்குரிய விஷயம்

முதல்முறையாக இந்த க்ரெஸ்ட் பேட்ஜ் 1945ம் ஆண்டு வெளிவந்த ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரில்தான் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த க்ரெஸ்ட் பேட்ஜ் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விஷயமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Volkswagen India has launched the Crest Collection for Ameo, Polo Vento.
Please Wait while comments are loading...

Latest Photos