வால்வோ கார்களில் ஸ்கைப் கால் வசதி!

Written By:

ஸ்மார்ட்போனில் இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இப்போது கார்களிலும் வெகுவேகமாக இடம்பெற்று வருகிறது.

மொபைல்போன் அழைப்புகள், பொழுதுபோக்கு வசதிகள், நேவிகேஷன் என அனைத்து வசதிகளையும் ஒருங்கே தரும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்பது இப்போது கார்களில் பிரதான விஷயமாகி வருகிறது.

அந்த வகையில், ஸ்கைப் வசதியை கார்களில் அறிமுகப்படுத்தி உள்ளது வால்வோ கார் நிறுவனம். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஸ்கைப் கால் வசதியை வால்வோ கார் நிறுவனம் வழங்க உள்ளது.

 

வால்வோ எஸ்90 சொகுசு செடான் காரில் இந்த ஸ்கைப் கால் வசதி முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. வால்வோ எஸ்90 தவிர்த்து, வி90 மற்றும் எக்ஸ்சி90 கார்களிலும் ஸ்கைப் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கைப் ஃபார் பிசினஸ் என்ற சாஃப்ட்வேர் மேற்கண்ட வால்வோ கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற இருக்கிறது. இந்த புதிய ஸ்கைப் அப்ளிகேஷன் மூலமாக குரல் வழி அழைப்பு மூலமே மேற்கொள்ள முடியும். பாதுகாப்பு கருதி வீடியோ கால் வசதி வழங்கப்படாது.

மேலும், அலுவலக பணியாளர்களுக்கு இடையிலான உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ளவும், வரும் அழைப்புகளை பார்த்துக் கொள்வதற்கான வசதியும் இருக்கும். மேலும், அலுவலக பணிகள் மற்றும் கூட்டம் குறித்த நினைவூட்டல் வசதிகளை பதிவு செய்து தெரிவிக்கும் வசதியும் உள்ளது.

கார் ஓட்டும்போது ஸ்கைப் வீடியோ கால் வசதி கவனக்குறைவை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு கருதி வீடியோ கால் வசதி வழங்கப்படவில்லை என்று வால்வோ நிறுவனத்தின் அதிகாரி ஆன்டர்ஸ் டில்மேன் மைக்விக்ஸ் தெரிவித்தார்.

ஸ்கைப் கால் வசதி தவிர்த்து, அமேஸான் அலெக்ஸா மற்றும் ஆப்பிள் சிரி போன்ற கார்டனா டிஜிட்டல் பர்சனல் அசிஸ்டென்ட் என்ற புதிய தொழில்நுட்ப வசதியையும் கார்களில் வழங்க வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து குரல் வழி கட்டளை மூலமாக கார் சாதனங்களை கட்டுப்படுத்தும் வசதியையும் அளிப்பதற்கான திட்டமும் வால்வோ நிறுவனத்திடம் இருக்கிறது.

English summary
Volvo Becomes The First Manufacturer To Integrate Skype In Cars.
Please Wait while comments are loading...

Latest Photos