வால்வோ எஸ்90 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய வால்வோ எஸ்90 சொகுசு கார் பற்றிய விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

Written By:

வால்வோ எஸ்90 சொகுசு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை விற்பனையில் இருந்த வால்வோ எஸ்80 காருக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

வால்வோ நிறுவனத்தின் நவீன கட்டமைப்பு மற்றும் விசேஷ வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வால்வோ நிறுவனத்தின் புதிய ஸ்கேலபிள் புரோடக்ட் ஆர்கிடெக்சர் என்ற நவீன பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டது. வால்வோ எஸ்90 கார் 4,963மிமீ நீளமும், 1,890மிமீ அகலமும், 1,443மிமீ உயரமும் கொண்டது.

இந்த கார் 2,941மிமீ வீல் பேஸ் கொண்டதால் மிகச் சிறப்பான உட்புற இடவசதியை கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 11.4 மீட்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரின் மொத்த எடை 2,360 கிலோவாகும்.

நவீன கார் மாடல் என்பதை பரைசாற்றும் விதத்தில் மிக கூர்மையான முனைப்பகுதிகள் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, புதிய வால்வோ கார்களில் காணப்படும் சுத்தியல் வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், வால்வோ நிறுவனத்தின் சின்னத்தை தாங்கி நிற்கும் குறுக்கு வாட்டு கம்பியுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு கவர்ச்சியாக இருக்கிறது.

பின்புறத்தில் சி வடிவத்திலான எல்இடி டெயில் லைட்டுகள், க்ரோம் பூச்சுடன் கூடிய பளபளக்கும் வால்வோ எழுத்துக்கள் போன்றவை வசீகரிக்கும் அம்சங்கள்.

உட்புறத்தில் வால்நட் மரத் தகடுகள் மற்றும் லெதருடன் இழைக்கப்பட்டிருக்கும் டேஷ்போர்டு, க்ரீம் வண்ண இருக்கைகள், சென்டர் கன்சோலில் இருக்கும் 9 இன்ச் டச்ஸ்கிரீன் திரை போன்றவை கண்ணை கவரும் அம்சங்கள். இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும்.

சாட்டிலைட் நேவிகேஷன், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 19 ஸ்பீக்கர்கள் கொண்ட 1,400 வாட் பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் மியூசிக் சிஸ்டம் போன்றவை இந்த காரின் அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்கள்.

இந்த காரில் நப்பா லெதர் என்ற உயர்வகை தோல் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த இருக்கைகளில் வெதுவெதுப்பு மற்றும் குளிர்ச்சியை பெறக்கூடிய வசதியும் உண்டு. முன் இருக்கைகளின் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதியும் உள்ளது.

புதிய வால்வோ எஸ்90 காரில் இரட்டை டர்போசார்ஜர் உதவியுடன் இயங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187.4 பிஎச்பி பவரையும், 400என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக பின்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி கடத்தப்படுகிறது.

ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப Eco, Dynamic மற்றும் Comfort ஆகிய மூன்று விதமாக எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும், இந்த டிரைவிங் மோடுகள் மூலமாக இந்த காரின் ஏர் சஸ்பென்ஷனும் மாறிக் கொள்ளும்.

வால்வோ எஸ்90 சொகுசு காரில் இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

ரூ.53.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆகிய கார் மாடல்களுடன் இந்த புதிய வால்வோ எஸ்90 கார் போட்டி போடும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Volvo has launched its flagship S90 sedan in India. The S90 is the first semi-autonomous car to be sold in India.
Please Wait while comments are loading...

Latest Photos