உலகின் மிக நீளமான பஸ்சை அறிமுகப்படுத்திய வால்வோ!

உலகின் மிக நீளமான பஸ் மாடலை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பஸ்சின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து வசதியை சிறப்பாக்கும் வகையில், உலகின் மிக நீளமான பஸ்சை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஃபெட்ரான்ஸ்ரியோ என்ற வாகன கண்காட்சியில் இந்த புதிய பஸ்சின் சேஸீ காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பஸ் சேஸீயில் கட்டமைக்கப்படும் பஸ்கள் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என வால்வோ தெரிவித்துள்ளது.

மாடல் விபரம்

மாடல் விபரம்

கிரான் ஆர்டிக் 300 என்ற பெயரில் இந்த பஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரேசில் நாட்டில் இந்த புதிய வால்வோ பஸ் சேஸீ உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சேஸி நீளம்

சேஸி நீளம்

இந்த சேஸீ 30 மீட்டர் நீளம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு மல்டி ஆக்சில் பஸ்களைவிட கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கும்.

திரும்பும் அமைப்பு

திரும்பும் அமைப்பு

பஸ்சின் இடையில் இரண்டு இடங்களில் திருப்புதல் அமைப்பு கொண்டதாக இந்த பஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இதுபோன்ற பஸ்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே இயக்க முடியும்.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த பஸ்சில் அதிகபட்சமாக 300 பயணிகள் வரை செல்ல முடியும். இந்த பஸ்சில் பயணிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக 5 கதவுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

அதிக பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்தை இந்த பஸ்கள் குறைக்கும். மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தருமாம். மாசு உமிழ்வும் குறையும் என்று வால்வோ தெரிவித்துள்ளது.

 நமக்கும் அவசியம்தான்

நமக்கும் அவசியம்தான்

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிலும் இதுபோன்ற பஸ்கள் அவசியம்தான். ஆனால், அதற்கேற்ற தனி வழித்தடங்களை அமைத்தால் மட்டுமே இதுபோன்ற பஸ்களை அறிமுகப்படுத்த பஸ் நிறுவனங்கள் முன் வரும்.

 பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

இந்த பஸ்களின் மூலமாக போக்குவரத்து மிகவும் செம்மையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், தனி வழித்தடங்களில் செல்வதால் சீரான வேகத்தில், குறித்த நேரத்தில் செல்லும் வாய்ப்பையும் பயணிகள் பெறுவர். இதனால், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

தனி நபர் வாகனங்களால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபடுவது போன்றவையும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Volvo has launched the world's largest bus, the Gran Artic 300 at the FetransRio exhibition in Rio de Janeiro, Brazil.
Story first published: Tuesday, November 29, 2016, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X