கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வரும் யமஹா!

புதிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை யமஹா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

பைக் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான யமஹா மோட்டார்ஸ் கடந்த சில ஆண்டுகளாக கார் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், சில ஆண்டுகளாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் கார் கண்காட்சியில் கான்செப்ட் கார் மாடல்களை பார்வைக்கு வைத்து வருகிறது.

அதனை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், புதிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் ஒன்றை யமஹா தயாரித்து வருகிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

யமஹா ஸ்போர்ட்ஸ் ரைடு கான்செப்ட் என்ற பெயரில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் ரக கான்செப்ட் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

மெக்லாரன் எஃப்-1 காரின் வடிவமைப்பு நிபுணரான கார்டன் முர்ரே இந்த கார் வடிவமைப்பில் பங்காற்றியிருக்கிறார். இந்த கார் மெக்லாரன் சாயல் இருந்தாலும், யமஹா பிராண்டு முத்திரையுடன் வசீகரிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல் கார்டன் முர்ரேவின் ஐஸ்ட்ரீம் கார்பன் என்ற நவீன டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

யமஹா ஸ்போர்ட்ஸ் ரைடு கான்செப்ட் 3,900மிமீ நீளமும், 1,720மிமீ அகலமும், 1,170மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. மஸ்தா எம்எக்ஸ்-5 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களை குறுகலாகவும், தாழ்வான வடிவமைப்பையும் பெற்றிருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

இந்த கார் வெறும் 750 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மோட்டார்சைக்கிளை ஓட்டுவது போன்ற உணர்வை இந்த ஸ்போர்ட்ஸ் கார் தரும் என்று யமஹா தெரிவிக்கிறது. எஞ்சின் பற்றிய தகவல்கள் இல்லை.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

ஏற்கனவே கார்டன் முர்ரே வெளியிட்ட டி25 குட்டி காரின் புரோட்டோடைப்பில் பயன்படுத்தப்பட்ட 660சிசி எஞ்சின் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஆனால், அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

இந்த கார் மிக உறுதியும், இலகுவான கார்பன் ஃபைபரால் ஆன சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உலகிலேயே மிக குறைவான விலையில் உருவாக்கப்பட்டிருக்கும் கார்பன் ஃபைபர் சேஸீ என்றும் முர்ரே தெரிவிக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

மிக வலிமையான கார்பன் ஃபைபர் பேனல்களுடன் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், இந்த காரின் இன்டீரியர் வடிவமைப்பு கச்சாமுச்சாவென இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எல்லோரையும் இது கவராது என்பதும் வாதமாக இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் யமஹா நிறுவனம் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது பலருக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், 1965ம் ஆண்டிலிருந்து இதர கார் நிறுவனங்களுக்கு எஞ்சின்களை தயாரித்து கொடுத்து வருகிறது யமஹா.

ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்த யமஹா நிறுவனம்!

ஆம், பெரும் புகழ்பெற்ற டொயோட்டா 2000ஜிடி காருக்கான எஞ்சினை யமஹா நிறுவனம்தான் தயாரித்து கொடுத்தது. அத்துடன், ஃபோர்டு, வால்வோ உள்ளிட்ட பல பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு யமஹா நிறுவனம் கார் எஞ்சின்களை சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Yamaha claims that the driving experience of the Sports Ride Concept is close to riding a motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X