வோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடிக்கு இறுதி தீர்வு: ரூ.7700 கோடி டீல் வைத்த அமெரிக்கா..!

Written By:

வோக்ஸ்வேகனின் மாசு உமிழ்வு மோசடியில் அந்நிறுவனம் செலுத்த வேண்டிய அபாரத்தொகை குறித்து இறுதி தீர்வை வழங்கியுள்ளது சான்ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம்.

மோசடியில் ஈடுபட்ட வோக்ஸ்வேகன் நிறுவனம் அதனை திருத்திக்கொள்ளும் விதமாக  வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் பிரையர் மூன்று விதமான தீர்வுகளை முன்வைத்துள்ளார்.

மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபட்டத்தற்காக 1.22 பில்லியன் டாலர் அமெரிக்க அரசிற்கு வோக்ஸ்வேகன் நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும்

அல்லது மோசடி செய்து அமெரிக்காவில் விற்கப்பட்ட கார்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சான்ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இதன்மூலம் ஏற்கனவே அந்நிறுவனம் கட்ட வேண்டிய 21 பில்லியன் டாலருடன் சேர்த்து மொத்தமாக 22 பில்லியன் டாலர்களை வோக்ஸ்வேகன் அமெரிக்க அரசிற்கு செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணனை நடைபெற்று வந்த தருணத்தில் வோக்ஸ்வேன் மேலும் மேலும் 2.0 லிட்டர் கொண்ட காரிலும் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

அதனாலேயே தற்போது வோக்ஸ்வேகன் அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டிய தொகையில் கூடுதல் மதிப்பு உயர்ந்துள்ளது.

2015ம் ஆண்டில் அமெரிக்காவில் வோக்ஸ்வேகனின் 3.0 லிட்டர் எஞ்சின் கொண்ட சுமார் 80,000 கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மாசு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.

இதற்காக, பிரத்யேக சாஃப்ட்வேர் ஒன்றையும் அந்நிறுவனம் பயன்படுத்தி மெகா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வோக்ஸ்வேகனின் 3.0 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட கார் தயாரிப்புகளில் இந்த மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

வோக்ஸ்வேகன் கார்களுடன், அதனுடைய துணை நிறுவனங்களான ஆடி, போர்சே, மற்றும் சில வோக்ஸ்வேகன் எஸ்.யூ.வி ரக கார்களிலும் மாசு உமிழ்வு மோசடி கண்டறியப்பட்டது.

மாசு உமிழ்வு மோசடியில் தற்போது சான்ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்வில் 2.0 லிட்டர் கொண்ட கார்களுக்கு தனியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், அந்நிறுவனம் அமெரிக்காவிற்கு 14.7 பில்லியன் டாலர்களை செலுத்தி 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட கார்களை வோக்ஸ்வேகன் திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

3.0 லிட்டர் எஞ்சின் கார்களை உரிமையாளர்கள் பழுது பார்க்க கொடுத்திருந்தால், அதற்கு 7 ஆயிரம் முதல் 16 ஆயிரம் டாலர்கள் வரை அவர்களுக்கு வோக்ஸ்வேகன் கொடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் விஸ்வரூம் எடுத்த இந்த மோசடிக்கான இறுதி தீர்வு வழங்கப்பட்டுள்ளதற்கு வோக்ஸ்வேகன் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

சான்ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம் முன்வைத்துள்ள இந்த தீர்வுகளை குறித்து பேசிய வோக்ஸ்வேகனின் செய்தித் தொடர்பாளர் ஜெனீன் கின்னிவன்,

"வோக்ஸ்வேகனின் வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு மைல்கல், அனைத்து வோக்ஸ்வேகனின் நுகர்வோர்களுக்கு இதில் தீர்வு இருப்பது மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

 

English summary
A United States federal judge has approved compensation of $1.2 Billion for a part of the Volkswagen Dieselgate scandal compensation. Check for Detials...
Please Wait while comments are loading...

Latest Photos